நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் ஜனாதிபதி தேர்தலை இம்முறை நடத்த உதவியமைக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், க ண்காணிப்பாளர்களுக்கும், பொது மக்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிதித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், இதுவரை காலமும் தன்னுடன் அரயல் பயணத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் தான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தன்னுடன் 26 வருடங்களாக இணைந்திருந்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், பிரதித் தலைவர் பதவியலிருந்து விலகினாலும் கூட மக்களுக்கான பணியை தொடர்ந்து முன்னெடுத்து செல்வேன் என்றும் அவர் இதன்போது கூறினார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் சஜித் பிரேமதாச விடுத்துள்ள ஊடக அறிவிப்பிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது வரை வெளியாகியுள்ள வாக்குகளின் அடிப்படையில் இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக பொதுஐன பெரமுன கட்சியின் ஐனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச முன்னிலை வகிக்கின்றார்.
இந்நிலையில் சிறிரேலோ கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி உறுப்பினர்கள் கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.
இன்று (17.11.2019) காலை 10.30 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையம் , புதிய பேரூந்து நிலையம், குருமன்காடு சந்தியடி போன்ற பகுதிகளில் வெடி கொழுத்தி வெற்றியை கொண்டாடியுள்ளனர்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியை உள்ளடக்கிய யாழ். மாவட்ட இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
யாழ். மாவட்டத்தில் வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 312272 வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
வெளியான முடிவுகளின்படி யாழ் தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 312272 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 23261 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 1375 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 6845 வாக்குகளையும், எம்.எச்.எம்.ஹிஸ்புல்லா 973 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது வவுனியா, மன்னார், முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னி மாவட்ட இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 174739 வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
வெளியான முடிவுகளின்படி வன்னி தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 174739 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 26105 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 1156 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 1695 வாக்குகளையும், எம்.எச்.எம்.ஹிஸ்புல்லா 457 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இதுவரை (காலை 8.15 மணி) வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 955,998 (49.71%) வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். கோத்தபாய ராஜபக்ச 833,091(43.32%) வாக்குகளையும், அநுரகுமார திஸாநாயக்க 62029(3.23%) வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது வன்னி மாவட்ட மன்னார் தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.
இதன்படி வன்னி மாவட்டத்திற்கான மன்னார் தொகுதிகளுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. வன்னி மாவட்ட மன்னார் தேர்தல் தொகுதி வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.
அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 53602 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தபாய ராஜபக்ஷ 6435 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 180 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 378 வாக்குகளையும், எம்.எச்.எம்.ஹிஸ்புல்லா 150 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 64102 வாக்குகள் பதிவாகியுள்ளதுடன் அதில் 837 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.செல்லுபடியான வாக்குகள் 63265 ஆகும்
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது வன்னி மாவட்ட வவுனியா தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.
இதன்படி வன்னி மாவட்டத்திற்கான வவுனியா தொகுதிகளுக்கான உத்தியோகப்பூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. வன்னி மாவட்ட வவுனியா தேர்தல் தொகுதி வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.
அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 65141 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 13715 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 667 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 552 வாக்குகளையும், எம்.எச்.எம்.ஹிஸ்புல்லா 191 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இதுவரை (காலை 7.00 மணி) பெரும்பாலான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளிவந்துள்ளன. வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 691,998 (51.56%) வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். கோத்தபாய ராஜபக்ச 549,151( 40.92%) வாக்குகளையும், அநுரகுமார திஸாநாயக்க 43306(3.32%) வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
வடக்கு கிழக்கில் இதுவரை வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 80 விகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இதுவரை (காலை 7.00 மணி) பெரும்பாலான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளிவந்துள்ளன.
வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 691,998 (51.56%) வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 549,151( 40.92%) வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். அநுரகுமார 43306(3.32%) வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
வடக்கு கிழக்கில் இதுவரை வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 80 விகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது வன்னி மாவட்ட முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.
இதன்படி வன்னி மாவட்டத்திற்கான முல்லைத்தீவு தொகுதிகளுக்கான உத்தியோகப்பூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. வன்னி மாவட்ட முல்லைத்தீவு தேர்தல் தொகுதி வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது யாழ். மாவட்ட ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.
அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 11,319 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 2,917 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 382 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது யாழ். மாவட்ட பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான யாழ்ப்பாணம் தொகுதிகளுக்கான உத்தியோகப்பூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. யாழ்ப்பாணம் மாவட்ட பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.
அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 19,931 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 1,848 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 644 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது யாழ். மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான யாழ்ப்பாணம் தொகுதிகளுக்கான உத்தியோகப்பூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
யாழ்ப்பாணம் மாவட்ட யாழ் தேர்தல் தொகுதி வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார். அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 20792 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 1617 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 96 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை மறுநாள் திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அ சம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் இதுவரை (அதிகாலை 4.30 மணி) பெரும்பாலான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளிவந்துள்ளன. வெளியான முடிவுகளின்படி கோத்தபாய ராஜபக்ச 252,269( 52.87%) வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். சஜித் பிரேமதாச 189,275 (39.67%) வாக்குகளையும், அநுரகுமார 22356(4.69%) வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை மறுநாள் திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அ சம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது திருகோணமலை மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது. அந்தவகையில, திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 14148, அளிக்கப்பட்ட வாக்குகள் 14021, செல்லுபடியான வாக்குகள் 13860, நிராகரிக்கப்பட்டவை 161.
நாளை ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை மறுநாள் திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.
இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான நல்லூர் தொகுதிகளுக்கான உத்தியோகப்பூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
இதன்படி கோத்தபாய ராஜபக்ச 1,836 , சஜித் பிரேமதாச 27,605, அநுரகுமார திசாநாயக்க 166, சிவாஜிலிங்கம், 659 வாக்குகளையும், ஹிஸ்புல்லாஹ் 24 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 46,888, செல்லுபடியான வாக்குள் 32,093, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 32941, நிராகரிக்கப்பட்டவை 848.
நாளை ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை மறுநாள் திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
வன்னி தேர்தல் தொகுதிக்கான (வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ) தபால் மூல வாக்குகளின் இறுதி முடிவுகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாச 8402 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கின்றார். இன்று (17.11.2019) காலை 1.30 மணியளவில் இவ் முடிவுகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன.
தபால் மூல மூல வாக்களிப்பின் இறுதி முடிவின் அடிப்படையில் சஜித் பிரேமதாச 8402 வாக்குகளையும் கோத்தபாய ராஐபக்ச 1703 வாக்குகளையும் அனுரகுமார திஸநாயக்க 147 வாக்குகளையும் சிவாஜிலிங்கம் 144 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
வெளியாகியுள்ள வன்னியின் தேர்தல் தொகுதியில் முடிவுகளின் படி சஜித் பிரேமதாச முதலாவது இடத்தினையும் கோத்தபாய ராஐபக்ச இரண்டாவது இடத்தினையும் அனுரகுமார திசநாயக்க மூன்றாவது இடத்தினையும் சிவாஜிலிங்கம் நான்காவது இடத்தினையும் பெற்றுள்ளனர்.
ஒன்பது வாக்கு என்னும் நிலையங்களின் முடிவுகள் தனித்தனியாக