வவுனியாவில் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ள 1000 அரச ஊழியர்களை காப்பாற்றிய மூன்று உத்தியோகத்தர்கள்!!

வவுனியாவில்..

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்றையதினம் இடம்பெற்று வாக்கு எண்ணும் பணிகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (16.11.2019) மாலை 5.30 மணிமுதல் இடம்பெற்று வருகின்றது.

தேர்தல் கடமையில் 1000 க்கு மேற்பட்ட அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடமையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு இரவு வழங்கப்பட்ட உணவு (கிழங்கு ரொட்டி) பழுதடைந்தமை தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள நகரசபை பொது சுகாதார பரிசோதகர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து ஊழியர்களுக்கு உணவிணை வழங்கும் வவுனியா பிரதேச செயலக சிற்றுண்டிச்சாலை மற்றும் வவுனியா மாவட்ட செயலக சிற்றுண்டிச்சாலை என்பவற்றினை நகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனைக்குட்படுத்தினார்கள்.

குறித்த இரு சிற்றுண்டிச்சாலைகளினதும் உணவு தயாரிக்கும் இடம் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் உணவுகளின் தரம் பரிசோதிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலக சிற்றுண்டிச்சாலையின் உணவுகள் தரமான நிலையில் காணப்பட்டதுடன் உணவு தயாரிக்கும் இடமும் சுகாதாரமான முறையில் காணப்பட்டது.

அதன் பின்னர் வவுனியா பிரதேச செயலக சிற்றுண்டிச்சாலையினை சோதனைக்குட்படுத்திய சமயத்தில் சுகாதார சீர்கேடான முறையில் காணப்பட்டதுடன் கிழங்கு ரொட்டிக்கு வைக்கப்படும் கறியும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.

அதனையடுத்து குறித்த சிற்றுண்டிச்சாலையில் காணப்பட்ட கறி அனைத்தும் நகரசபை பொது சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கைக்கிணங்க குப்பையில் கொட்டப்பட்டது.

வவுனியா பிரதேச செயலக சிற்றுண்டிச்சாலையில் இன்றிரவு 841 கிழங்கு ரொட்டிகள் தயாரிக்கப்பட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த சிற்றுண்டிச்சாலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக நகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மீண்டும் ஆரம்பம்!!

இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி

வவுனியாவில் கடந்த 2019.11.13ம் திகதி அன்று டெங்கு அ பாயம் காரணமாக மூடப்பட்ட வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

பாடசாலை வளாகத்தில் டெங்கு அ பாய நிலை காணப்படுவதனால் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மூடப்படுவதாக வவுனியா தெற்கு வலயகல்விப் பணிப்பாளர் முத்து இராதகிருஸ்ணன் தெரிவித்திருந்தார்.

குறித்த பாடசாலையில் சுகாதார பரிசோகத்தர்கள் மேற்கொண்ட சோ தனை நடவடிக்கையின் போது டெங்கு நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து உ டனடியாக பாடசாலையை சுத்தம் செய்யுமாறு சுகாதார பணிமனையினரால் குறித்த பாடசாலைக்கு கடிதம் அனுப்பப்பட்டு நேற்றைய தினம் பாடசாலை வளாகம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அருகில் அமைந்துள்ள பாடசாலையின் விடுதி வளாகத்தில் உள்ள அனைத்து இடங்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை யினால் பாடசாலையை மீண்டும் திறப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்கு வருகைதருமாறு கல்லூரியின் அதிபர் அறிவித்துள்ளார்.

வாக்களிப்பில் சாதித்த வடக்கு, கிழக்கு : தென்னிலங்கை பின்னடைவு!!

வாக்களிப்பில் சாதித்த வடக்கு, கிழக்கு

2019ஆம் ஆண்டிற்கான இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்து வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நிலைமை இவ்வாறிருக்க 22 தேர்தல் மாவட்டங்களிலும் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை கடந்த முறை அதாவது 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது 22 தேர்தல் மாவட்டங்களிலும் பதிவாகிய வாக்குகளின் சதவீதத்துடன் இம்முறை பதிவாகிய வாக்குகளின் சதவீதத்தை ஒப்பிடும் வகையிலான விபரம் வெளியாகியுள்ளது.

முதலாவது தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்? வெளியாகியுள்ள தகவல்!!

தேர்தல் முடிவு எப்போது வெளிவரும்?

தற்போது நாடளாவிய ரீதியில் அனைத்து வாக்கெண்ணும் நிலையங்களிலும் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகி மும்முரமாக நடைபெற்று வருவதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

வாக்கெடுப்பு நடவடிக்கைகள் இன்று பிற்பகல் ஐந்து மணியுடன் நிறைவடைந்த நிலையில் அத்தருணத்திலேயே தபால்மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இம்முறை ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்பார்த்ததை விட அதிகளவிலான மக்கள் வாக்களித்துள்ளனர்.

அதேபோல முதலாவது தபால்மூல தேர்தல் முடிவுகளை நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் வெளியிட முடியும் தேர்தல்கள் ஆணையகம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு : த டை போட்ட பொலிஸார்!!

முக்கிய அறிவிப்பு

இலங்கையின் அரசியல் வரலாற்றில் வ ன்முறைகள் குறைந்த தேர்தல் இதுவென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதி முடிவு எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு முன்னர் அறிவிக்கப்படும். சரியான முடிவுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் பொறுமையாகவே அறிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வ ன்முறைகள் குறைந்த தேர்தல் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தேர்தல் வெற்றி பேரணி மற்றும் கூட்டங்களை நடத்த த டை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று நள்ளிரவின் பின்னர் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் இடம்பிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் : வெளியாகியுள்ள இறுதி அறிக்கை!!

ஜனாதிபதி தேர்தல்

2019 இலங்கை ஜனாதிபதி தேர்தலானது நான்கு சிறப்பம்சங்கள் காரணமாக தேர்தல் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிட்ட ஜனாதிபதி தேர்தல், பதவிலிருக்கும் ஜனாதிபதியோ பிரதமரோ போட்டியிடாத ஒரே ஜனாதிபதி தேர்தல், அதிகளவு நீளம் கொண்ட வாக்குச்சீட்டைக் கொண்ட ஜனாதிபதி தேர்தல்,

ஜனாதிபதி தேர்தலுக்கான நேரம் ஒரு மணித்தியாளமாக அதிகரிக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் சிறப்பம்சங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விடயங்களை குறிப்பிட்டு நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே அமைப்பு) வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தேர்தல் களம் தற்பொழுது பரபரப்பாகி வருகின்ற நிலையில் நாடளாவிய ரீதியில் மொத்தமாக 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலையில் சில தேர்தல் மாவட்டங்களில் மொத்தமாக பதிவாகியுள்ள வாக்குகளின் சதவீதங்கள்,

வவுனியாவில் ப லத்த பா துகாப்புடன் மாவட்ட செயலகத்திற்கு வாக்குப் பெட்டிகள்!!

வாக்குப் பெட்டிகள்

வவுனியாவில் 142 வாக்களிப்பு நிலையங்களில் இன்று (16.11.2019) காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இடம்பெற்ற வாக்களிப்பின் பின் வாக்குப் பெட்டிகள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு மாலை 6.00 மணி தொடக்கம் எடுத்து வரப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

வவுனியா மாவட்ட செயலகத்தின் பா துகாப்பு ப லப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏ9 வீதி மாவட்ட செயலகத்திலிருந்து சுற்றுவட்டம் (வைத்தியசாலை முன்பாகவுள்ள) வரையான வீதியும் மூ டப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகத்தில் தற்போது நூறுக்கு மேற்பட்ட பொ லிஸார் பா துகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் தபால் மூல வாக்கு எண்ணும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட வாக்களிப்பு வீதம் வெளியானது!!

வாக்களிப்பு வீதம்

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 5.00 மணிவரை இடம்பெற்றது.

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாக்களிக்க பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இந் நிலையில் வன்னி தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் இன்று (16.11.2019) காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரையிலான காலப்பகுதியில் 75.12 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

காலை 9.00 மணியளவில் 23 வீதமான வாக்குப்பதிவும், காலை 11.00 மணியளவில் 47 வீதமான வாக்குப்பதிவும், மதியம் 2.00 மணியளவில் 66 வீதமான வாக்குப்பதிவும், மாலை 3.30 மணியளவில் 70 வீதமான வாக்குப்பதிவும்,  மாலை 5.00 மணிக்கு 75.12 வீதமான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் எவ்வித தேர்தல் வ ன்முறைகளும் இடம்பெறவில்லை என அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார். வவுனியாவில் தேர்தல் கடமைக்காக 2155 பா துகாப்புப் பிரிவினரும் 1728 அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தேர்தல் வாக்களிப்பு நேரம் குறித்து குழப்பத்தில் மக்கள்!!

வாக்களிப்பு நேரம்

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற்றுவருகின்றது.

வாக்காளர்கள் இன்று (16.11.2019) காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை வாக்களிக்க முடியுமென தேர்தல் திணைக்களத்தினால் தெரிவித்திருந்த போதிலும் வவுனியாவில் பிற்பகல் 4.00 மணியென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் அமைந்துள்ள பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு நேரம் முற்பகல் 7.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை என அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வாக்களிப்பு நேரம் குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபாவிடம் வினவிய போது,

இவ்விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாகவும் வாக்காளர்கள் மாலை 5.00 மணிவரை வாக்களிக்க முடியுமென தெரிவித்தார்.

வவுனியாவில் மதியம் 12.00 மணிவரை 50 வீதமான வாக்குப்பதிவு!!

வாக்குப்பதிவு

வன்னி தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் இன்று (16.11.2019) காலை 7.00 மணி தொடக்கம் 12.00 மணிவரையிலான காலப்பகுதியில் 50வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

காலை 9.00 மணியளவில் 23வீதமான வாக்குப்பதிவும் , காலை 11.00 மணியளவில் 47வீதமான வாக்குப்பதிவும் மதியம் 12.00 மணியளவில் 50வீதமான வாக்கு பதிவும் வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகவும்,

அத்துடன் இதுவரை எவ்வித தேர்தல் வ ன்முறைகளும் வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவில்லையென அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் தேர்தல் கடமைக்காக 2155 பா துகாப்புப் பிரிவினரும் 1728 அரச ஊழியர்களும் கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!!

வாக்களிப்பு

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று (16.11.2019) நடைபெற்று வரும் நிலையில் வவுனியாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றார்கள்.

குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாலையிலேயே ஆர்வத்துடன் சென்று வாக்களிப்பில் ஈடுபட்டு வருவதுடன் நகர்ப்புறங்களில் வாக்களிப்பானது மந்தகதியில் நடைபெற்று வருகின்றது.

குறிப்பாக வைரவப்புளியங்குளம், குருமன்காடு, மற்றும் வவுனியா நகர்ப்புறங்களில் அமைந்துள்ள சில வாக்களிப்பு நிலையங்கள் அதிகாலை தொடக்கம் மக்கள் மந்தகதியிலேயே வாக்களித்து வருகின்றனர்.

வவுனியாவில் 182 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு முப்ப டையினர் உட்பட 2155 பாது காப்புப் ப டையினர் பா துகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் தேர்தல் கடமையில் 1728 அரச உத்தியோகத்தர்களும் பணியாற்றி வருகின்றனர்.

வவுனியாவில் இன்று காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தேர்தல் க ண்காணிப்பாளர்களும் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் மதியம் 12.00 மணிவரை எந்தவிதமான வ ன் முறைச் சம்பவங்களும் பதிவாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வவுனியாவில் வாக்களிப்புக்கு சாதகமான காலநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வீதியில் விசப்பட்டு கிடந்த பிரச்சார அட்டைகள் : சுத்தம் செய்த பொலிஸார்!!

பிரச்சார அட்டைகள்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு (வாக்கு சாவடி அமைந்துள்ள பாடசாலை) அருகே வீதியில் விசப்பட்டு கிடந்த தேர்தல் பிரச்சார அட்டைகளை பொலிஸார் சுத்தம் செய்தனர்.

குறித்த வாக்கு சாவடிக்கு அருகே வீதியில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் பிரச்சார அட்டைகள் (வாக்களிப்பு தொடர்பான) வீசப்பட்டு கிடந்தன.

இதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து வீதியில் விசப்பட்டு கிடந்த பிரச்சார அட்டைகளை எடுத்துச் சென்றனர்.

வவுனியாவில் காலையில் பெருமளவிலான மக்கள் வாக்குப்பதிவு!!

வாக்குப்பதிவு

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (16.11) காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் வவுனியாவில் வாக்களிப்பு சாவடிகளில் காலை 7.00 மணி தொடக்கம் 8.00 மணி வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் அதிகளவான மக்கள் தங்களது வாக்குப்பதிவினை மேற்கொண்டிருந்தனர்.

குறிப்பாக நெளுக்குளம், இராசேந்திரகுளம், பண்டாரிகுளம், கூமாங்குளம் மற்றும் வவுனியா நகரிலுள்ள வாக்குச்சாவடிகளில் காலையில் மக்கள் அதிகளவில் வாக்களிப்பதினை அவதானிக்க முடிந்தது.

அத்துடன் பொலிஸார் வாகனங்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இளம் தாயாரும் குழந்தையும் கிணற்றுக்குள் ச டலமாக : கணவரின் தொலைபேசி அழைப்பால் ச ந்தேகம்!!

இளம் தாயாரும் குழந்தையும்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளம் தாயாரும் பிஞ்சு குழந்தையும் கி ணற்றில் ச டலமாக மீ ட்கப்பட்ட விவகாரத்தில் கணவரையும் குடும்பத்தையும் கை து செய்து விசாரிக்க கோரி அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நிஜினா மற்றும் அவரது 8 மாதமேயான பிஞ்சு குழந்தையும் ச டலமாக கிணற்றுக்குள் இருந்து மீ ட்டுள்ளனர். கணவரும் அவரது உறவினர்களும் சேர்ந்து கொ லை செய்து கி ணற்றில் வீ சியிருக்கலாம் என நிஜினாவின் உறவினர்கள் ச ந்தேகம் எழுப்பியுள்ளனர்.

வரதட்சினை தொடர்பில் கணவரின் குடும்பத்தினர் நிஜினாவை தொடர்ந்து து ன்புறுத்தி வந்ததாக பு கார் தெரிவித்துள்ளனர். திங்களன்று நிஜினாவும் குழந்தையும் கிராமத்திற்கு வந்தார்களா என கேட்டு சகோதரர் நிஜேஷுக்கு நிஜினாவின் கணவர் தொலைப்பேசியில் அழைத்ததே ச ந்தேகத்தை ப லப்படுத்தியுள்ளது.

நிஜினா திருமணத்திற்கு பின்னர் இதுவரை பிறந்த வீட்டுக்கு தனியாக சென்றதில்லை என கூறப்படுகிறது. இரவு கணவன் மனைவி இடையே வா க்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனால் அவர் பிறந்த வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்ற ச ந்தேகத்தில் அழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனைடையே நிஜேஷ் தமது சகோதரிக்கு பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், எந்த பலனும் இல்லாத நிலையில், அப்பகுதி பொதுமக்கள் நிஜினாவின் ச டலம் கி ணற்றில் கண்டெடுத்துள்ளதாக நிஜேஷிடம் அறிவித்துள்ளனர்.

நிஜேஷின் நண்பர்களே நிஜினாவின் ச டலத்தை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் கணவரின் உறவினர்களோ கணவரோ எவரும் செல்லவில்லை எனவும் கு ற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிந்து வி சாரணை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

அம்மாவுடன் ச ண்டை : பெண் எடுத்த வி பரீத முடிவு!!

வி பரீத முடிவு

தமிழகத்தில் தன்னுடைய திருமணத்திற்காக தாய் க டன் வாங்கியதால் இளம்பெண் ஒருவர் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. ஈரோட்டின் பெருந்துறையை சேர்ந்த தம்பதி சந்திரன்- மோகனா, இவர்களுக்கு சத்யா(வயது 21), மற்றும் பிரவீன்குமார்(வயது 18) என இருபிள்ளைகள்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சந்திரன் இறந்துவிட்டதால், பிள்ளைகளுடன் கோயம்புத்தூர் வந்து குடியேறிய மோகனா, விவசாய வேலை செய்து வந்துள்ளார். குடும்பம் கஷ்டத்தில் இருந்தால் பலரிடம் கடன் வாங்கி அதை அடைக்கவே சிரமப்பட்டுள்ளார் மோகனா.

இந்நிலையில் சத்யாவுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயமும் செய்துள்ளார், திருமணத்திற்காக மீண்டும் கடன் வாங்க சத்யா, மோகனாவிடம் ச ண்டையிட்டுள்ளார்.

அத்துடன் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு சென்ற சத்யா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை, சத்யாவை எங்கு தேடியும் கிடைக்காததால் மோகனாவுக்கு ப யம் மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் அவர்களது வீட்டிலிருந்து சில தொலைவில் இருக்கும் கிணற்றில் இளம்பெண் ஒருவர் விழுந்து கிடப்பதாக தகவல்கள் வந்துள்ளது. ப தறித்து டித்து போன மோகனா சென்று பார்த்த போது, சத்யா என தெரியவந்ததால் கதறி அ ழுதுள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் ச டலத்தை மீட்டு வி சாரணை நடத்தி வருகின்றனர்.

180 பயணிகளுடன் புல்வெளியில் தரையிறங்கிய விமானம் : திக் திக் நிமிடங்கள்!!

புல்வெளியில் தரையிறங்கிய விமானம்

பெங்களூரு விமான நிலையத்தின் புல்வெளியில் 180 பயணிகளுடன் தரையிறங்கி மீண்டும் Take off ஆகி சென்ற விமானத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளது.

GoAir நிறுவனத்தைச் சேர்ந்த A320 என்ற விமானம், நாக்பூரில் இருந்து கடந்த 11ம் திகதி புறப்பட்டது. பெங்களூருவில் தரையிறங்க முயன்ற போது ஓடுபாதைக்கு அருகில் இருக்கும் புல்வெளிக்கு சறுக்கிச் சென்றது.

வி பரீதத்தை உணர்ந்த விமானி உடனடியாக மீண்டும் விமானத்தை Take Off செய்து ஐதராபாத்தில் அவசரநிலையில் தரையிறங்கியுள்ளார். இதனைதொடர்ந்து அனைத்து பயணிகளும் ப த்திரமாக தரையிறக்கப்பட்டனர்,

இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக டிஜிசிஏ அமைப்பிற்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், விமான ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.