விஸ்வரூபம்-2 படத்தில் தண்ணீருக்கு அடியில் சண்டை காட்சி: கமல்..!

vishபுதிய தொழில்நுட்பத்தின் மூலம் விஸ்வரூபம்-2 படத்தில் தண்ணீருக்கு அடியில் சண்டை காட்சிகளை படமாக்கி உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விஸ்வரூபம் படத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதனையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு வெளியிட்டனர். இந்நிலையில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல்போஸ், சேகர் கபூர், நாசர் உள்ளிட்டோரின் நடிப்பில் விஸ்வரூபம்-2 தயாராகி உள்ளது.

கமல் திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, கமல்ஹாஸனின் ராஜ்கமல் நிறுவனத்துடன், ஒஸ்கர் ரவிச்சந்திரன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.

தாய்லாந்து, பாங்காக்கில் இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்களை கமல் வெளியிட்டார்.

இந்நிலையில் படத்தின் சிறப்பம்சம் குறித்து சமீபத்தில் கமல் கூறுகையில், விஸ்வரூபம் படத்தை உருவாக்கும் போதே, இரண்டாம் பாகம் பற்றி சிந்தித்தேன்.

விஸ்வரூபம் 2 படத்திற்கான 90 சதவிகித படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இருக்கிறோம்.

தண்ணீருக்கு அடியில் வைத்து எடுக்கப்பட்ட சண்டைகாட்சிகள் நிச்சயம் பெரிதாகப் பேசப்படும். மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அகதி முகாமில் இலங்கை மாணவி மீது ஆசிரியர் பாலியல் தொல்லை..!

தமிழ்நாடு – ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பவானிசாகர் பகுதி அகதி முகாமில் வசிக்கும் இலங்கை சிறுமி ஒருவருக்கு ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பவானிசாகர். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த ஒரு மாணவியை, அப்பள்ளியில் பணியாற்றும் ஓவிய ஆசிரியர் தியாகராஜன் என்பவர் சில்மிஷம் செய்து, பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக,மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால், கொதிப்படைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், நேற்று மாலை திடீரென பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த பவானிசாகர் பொலிஸ் பொறுப்பதிகாரி சுப்புரத்தினம்,எஸ்.ஐ.,கணேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முதன்மை கல்வி அதிகாரியிடம், இதுபற்றி கூறி, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் உறுதியளித்தால், பெற்றோர் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சம்பளத்தை 5 கோடியாக உயர்த்திய சந்தானம்..!

santhanamதமிழ் திரையுலகில் நகைச்சுவை திறமையை உயர்த்திக் கொண்ட சந்தானம் தனது சம்பளத்தையும் 5 கோடிக்கு உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தமிழ் சினிமாவின் பாதி படங்கள் சந்தானத்தின் கொமடிக்காகத்தான் ஓடுகின்றன என்று கொலிவுட் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுவருகின்றன.

அதே போல் தயாரிப்பாளர்களும் சந்தானம் படத்தில் இருந்தாலே போட்ட முதலை எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் சந்தானத்தை தெரிவு செய்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட சந்தானம் தனது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தியுள்ளார்.

சந்தானத்திற்கு மவுசு அதிகமாக உள்ளதால் வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர்களும் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுப்பதற்கு தயாராகிவருகின்றனர்.

சிறந்த கால்பந்து வீரர் விருது யாருக்கு – முன்னணி வீரர்கள் பலர் போட்டி!!

football

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கு, மெஸ்சி, ரொனால்டோ உள்ளிட்ட 10 முன்னணி வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆண்டு முதல் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள கழக அணிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஆண்டு தோறும் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்படும்.

இவ்விருதை 2011ல் பார்சிலோனா அணிக்காக பங்கேற்ற மெஸ்சி தட்டிச்சென்றார். 2012ல் பார்சிலோனாவின் இனியஸ்டா வென்றார்.

இந்த ஆண்டு கழக அணிகளில் சிறப்பாக செயல்பட்ட 10 வீரர்கள் கொண்ட பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது.

இதில் மெஸ்சி (பார்சிலோனா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மட்ரிட்), கெராத் பேல் (டாட்டன்ஹாம்), இப்ராகி மோவிச் (பாரிஸ் செண்ட் ஜெர்மியான்), ரோபர்ட் லீவான்டோவிச் (போரிஸ் டிராட்மண்ட்), ரொபின் வான் பெர்சி (மன்செஸ்டர் யுனைடெட்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களை தவிர பேயர்ன் முனிக் அணியின் தோமஸ் முல்லர், பிரான்க் ரிபரி, அர்ஜன் ராபன், பாஸ்டின் ஆகியோரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

சிறந்த வீரருக்கான விருது வரும் ஒகஸ்ட் 29ம் திகதி மொனாகோவில் நடக்கும் சம்பியன்ஸ் லீக் தொடரின் அட்டவணை அறிவிப்பின் போது வழங்கப்படும்.

இளவரசன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திவ்யா மறுப்பு..!

divyaதர்மபுரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளவரசன், திவ்யா ஆகியோர் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். அப்போது திவ்யா தந்தை தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து அங்கு வன்முறை ஏற்பட்டது. தொடர்ந்து தனது மகளை கண்டுபிடித்து தருமாறு திவ்யாவின் தாயார் சென்னை உயர் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து திவ்யா நீதிமன்றில் ஆஜரானார். தொடர்ந்து வழக்கு நடந்து வந்த நிலையில், தனது தாயாருடனேயே தான் இருக்க விரும்புவதாக திவ்யா கூறினார்.

இந்தநிலையில் கடந்த 4ஆம் திகதி தர்மபுரி ரயில் தண்டவாளத்தில் இளவரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இளவரசன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் இளங்கோவன் கிருஷ்ணவேணி ஆகியோர் நீதிமன்றத்தை நாடினர்.

தற்போது அவரது உடல் தருமபுரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்றில் மில்டன் என்பவர், இளவரசன் இறுதி சடங்கில் அவரது மனைவி திவ்யா கலந்து கொள்ள வேண்டும்.

இந்து முறைப்படி சடங்குகள் நடக்க வேண்டும் என்று கோரி மனு செய்திருந்தார். இதுகுறித்து பதில் அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்று உத்தரவிட்டது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் திவ்யாவின் இல்லத்திற்கு சென்று, இதுகுறித்து தெரிவித்தது. தற்போது உள்ள சூழ்நிலையில் நான் கலந்து கொள்ள இயலாது என்று கூறிய திவ்யா, கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் இதனை நிதிமன்றில் தெரிவிக்க உள்ளது.

சத்ய சாய்பாபா வேடத்தில் மலையாள நடிகர் திலீப் – சம்பளம் 7 கோடி இந்திய ரூபாய்!

Dileep

புட்டபர்த்தி சத்ய சாய்பாபா வேடத்தில் நடிக்க மலையாள நடிகர் திலீப்பை தேர்வு செய்துள்ளார் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா. புட்டபர்த்தி சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு “சாய்பாபா” என்ற பெயரிலேயே தெலுங்கில் திரைப்படமாகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் முறையில் உருவாகும் இப்படத்தில் சாய்பாபா வேடத்தில் நடிக்க ஏராளமான தென்னிந்திய நடிகர்களை கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் பரிசீலித்த இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா, கடைசியில் பிரபல மலையாள நடிகர் திலீப்பை தேர்வு செய்துள்ளார்.

அவருக்கு பெரிய சம்பளம் பேசப்பட்டுள்ளது. அவரது சம்பளம் ரூ 7 கோடி என தெரிய வந்துள்ளது. மம்முட்டி, மோகன்லால் கூட இவ்வளவு சம்பளம் பெற்றதில்லை. தெலுங்கு தவிர மற்ற மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடும் திட்டமுள்ளதாம்.

இந்த படத்தில் கோடி ராமகிருஷ்ணாவுடன் திரையுலகின் பல ஜாம்பவான்கள் பணியாற்ற இருக்கிறார்கள். இசைக்கு இசைஞானி இளையராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சாய் பாபாவின் 20 வயது முதல் அவர் சமாதி அடையும் வரையிலான நிகழ்வுகளை சித்தரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு புட்டபர்த்தி மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நடக்கவிருக்கிறது. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

இங்கிலாந்தின் அடுத்த வாரிசு ஆணா? பெண்ணா? – சூடுபிடிக்கும் சூதாட்டம்

kate-william

இளவரசர் வில்லியம்ஸூக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என இடம்பெரும் சூதாட்டங்களில் பெருமளவான பணம் புரள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேத் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

பிரசவத்துக்காக அவர் மத்திய லண்டனில் உள்ள பட்டிங்டான் செண்ட் மேரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் கர்ப்பமானதில் இருந்து வில்லியம்ஸ் – கேத் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதில் இங்கிலாந்து மக்கள் ஆர்வமாக இருந்து வருகிறார்கள். குறிப்பாக அவர் என்ன சாப்பிடுகிறார் எங்கு போகிறார். அரண்மனையில் எப்படி நடத்துகிறார்கள் என்பன பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வமாகவுள்ளனர்.

கேத்துக்கு குழந்தை பிறக்கும் நேரம் வந்து விட்டது. அவருக்கு வருகிற 13–ம் திகதி குழந்தை பிறக்கும் என்று தகவல் வெளியானது. ஆனால் அதற்கு முன்பே குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தநிலையில் கேத்துக்கு பிறக்கப் போவது ஆணா? பெண்ணா? என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. இதைப்பயன்படுத்தி இங்கிலாந்தில் பெரிய அளவில் சூதாட்டமே நடக்கிறது. இளவரசர் தான் பிறப்பார் என்று ஒரு சாராரும், இளவரசிதான் பிறப்பார் என்று ஒரு சாராரும் பணம் கட்டி சூதாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதில் பெரும்பாலானவர்கள் பெண் குழந்தை பிறக்கும் என்று கூறி பணம் கட்டியுள்ளனர். அரண்மனையில் பெண் வாரிசுகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பெண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்றும் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த சூதாட்டத்தில் பெருமளவு பணம் புரள்வதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். பையன் பிறந்தால் அலெக்சாண்ரா என்று பெயர் சூட்டுமாறு பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண் பிறந்தால் கேர்லோட், டயானா, எலிசபெத் விக்டோரியா ஆகிய பெயர்களும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் கேத்தரின் சகோதாரர் ஜேம்ஸ் பெயரைத்தான் குழந்தைக்கு சூட்டுவார் என்றும் பந்தயம் சூட்டியுள்ளனர்.

கொலை முயற்சி வழக்கு – கைதாவாரா விஜயகாந்த்??

vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் பரபரப்பு காணப்படுகிறது.

அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 1ம் தேதி நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக வழக்கறிஞர்களுக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அரசு வழக்கறிஞர் ஞானசேகரன் என்பவர் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் விஜயகாந்த் உள்பட 6 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் ரிஷிவந்தியம் பயணத்தை பாதியில் நிறுத்தி விட்டு கிளம்பிப் போய் விட்டதாகவும் கூறப்படுகிறது.

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறி நிலை..!

Sampanthanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று மாலை 5 மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.

தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சங்கையா, கிருஷ்ணபிள்ளை, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், துரைரெத்தினம், சர்வேஸ்வரன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், கருணாகரன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், க.சிவநேசன் (பவன்), ராகவன் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் தேர்தல் நியமனக் குழுவும், நிதிக்குழுவும் பிரச்சாரக்குழுவும் நியமிக்கப்பட்டது. பின்பு முதலமைச்சர் வேட்பாளர் சம்பந்தமாக நீண்டநேரம் ஆராயப்பட்டது.

விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக வரவேண்டும் என்பதை இரா.சம்பந்தன் மிகவும் ஆணித்தரமாக ஆதரித்து நின்றார்.

அதேவேளையில் மற்றைய கட்சிகளைச் சேர்ந்த பிரதநிதிகள் மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக வரவேண்டும் என்பதை ஆதரித்து தங்களுடைய கருத்துக்களைக் மிகவும் ஆணித்தரமாக கூறினார்கள்.

இந்தப் பிரச்சினை இழுபறி நிலையை அடைந்ததால் ஒரு முடிவில்லாமல் கூட்டம் இன்றுவரை பிற்போடப்பட்டுள்ளது.

கார்த்திகை விரதம் அனுஷ்டிக்கும் முறை !!

murugan god

இதனை “நட்சத்திர விரதம்” என கூறுவார். சரவணப்பொய்கையில் கார்த்திகைப் பெண்கள் முருகனைச் சீரும், சிறப்புடனும் பாலூட்டித் தாலாட்டி வளர்த்தனர். அவர்களைப் போற்றும் வகையில் கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திர நாளன்று விரதத்தைத் தொடங்க வேண்டும்.

தொடர்ந்து ஒவ்வொரு மாதமும், கார்த்திகை நாளன்று விரதமிருத்தல் வேண்டும். இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவேற்ற வேண்டிய விரதம் இது. கார்த்திகை மாதத்தில் வரும் பரணியன்று பகலில் உண்டு, இரவில் உண்ணாமல், விரதத்தைத் தொடங்க வேண்டும்.

மறுநாள் கார்த்திகையன்று நீராடி முருகனை வழிபட்டு அன்று முழுவதும் விரதமிருந்து, தியானம், பாராயணம், கோவில் வழிபாடு என்ற இவைகளைச் செய்ய வேண்டும். பகலிலும், இரவிலும் உறங்கக் கூடாது. மறுநாள் ரோகிணியன்று காலையில் நீராடி, முருகனை வழிபட்டுச் சிறிதளவு உண்ணலாம். விரதமும் நிறைவு பெறும்.

 

முக்கோணத் தொடரைக் கைப்பற்றியது இந்தியா… இலங்கை இறுதிவரை போராடித் தோல்வி..!

eranga

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வென்றது.

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

நாணயசுழற்சியை வென்ற இந்திய அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 71 ஓட்டங்களை பெற்றதோடு இலங்கை அணி, 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்படி இந்திய அணி 202 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கியது.

இறுதிய இந்திய அணி இறுதிவரை போராடி 49.4 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்று தொடரைக் கைப்பற்றியது.

உத்தரபிரதேசத்தில் 3 பேரால் சிறுமி கற்பழிப்பு – வாக்குமூலம் அளிக்கும் முன்பு நாக்கு துண்டிப்பு!!

Minor girl_rape

உத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட சிறுமியின் நாக்கை துண்டித்துள்ளனர். அவர் வரும் 24ம் தேதி வாக்குமூலம் அளிக்கவிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி 3 பேரால் கற்பழிக்கப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். ஆனால் மற்ற இருவர் இன்னும் சிக்கவில்லை. இந்த வழக்கில் சிறுமியின் தந்தை நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

சிறுமி வரும் 24ம் தேதி வாக்குமூலம் அளிக்கவிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிறுமியின் நாக்கை துண்டித்துவிட்டனர். இதையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கற்பழிப்பு வழக்கை வாபஸ் பெறுமாறு தங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக சிறுமியின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடலில் வண்ணம் தீட்டும் சர்வதேசத் திருவிழா (படங்கள் இணைப்பு)..

ஒஸ்ரியாவின் போர்ட்ஸ்டாஷ் நகரில் உடலில் வண்ணம் தீட்டும் சர்வதேசப் போட்டி ஜூலை மாதம் முதல் வாரம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை அடுத்து இங்கே பாருங்கள்..

10 9 8 7 4 5 6 2 1

அஜித்தின் வரவிருக்கும் படத்தின் தலைப்பு பறவை??

ajith

கொலிவுட்டில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்த 53 -வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.

படப்பிடிப்பு முடிவடைந்த பின்னரும் தலைப்பை வெளியிடாமல் ரசிகர்களின் பொறுமையை சோதித்துக் கொண்டிருக்கின்றனர் படக்குழுவினர்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது “வலை” என்று பெயரிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது வெறும் தற்காலிக தலைப்பு மட்டும் தான் என்று படக்குழுவினர் கூறினர்.

இதனைத் தொடர்ந்து கர்வம் என்று தலைப்பு வைத்திருப்பதாக வெளியான தகவலை இது சம்பந்தப்பட்டவர்கள் இதனை ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

இந்நிலையில் அஜித் 53 இன் தலைப்பு “பறவை” என்று தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால் பறவை என்ற பெயரில் வேறு ஒரு படம் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அறிமுகமாகின்றன Huawei Ascend Mate ஸ்மார்ட் கைப்பேசிகள்..!

m1

ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுள் ஒன்றான Huawei ஆனது Ascend Mate எனும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்துகின்றது.

6.1 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய IPS LCD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசிகள் 1.5GHz வேகத்தில் செயலாற்றும் Processor, பிரதான நினைவகமாக 2 GB RAM, நீடித்து உழைக்கக்கூடிய 4,050 mAh மின்கலங்கள் என்பவற்றினைக் உள்ளடக்கியுள்ளன.

மேலும் 8 மெகாபிக்சல்கள் உடைய துல்லியமான பிரதான கமெராவினையும், வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக 1 மெகாபிக்சலை உடைய துணைக் கமெரா ஒன்றினையும் கொண்டுள்ளன.

இவற்றின் பெறுமதியானது 449 அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

m1 m2

ஹிந்தி சிங்கத்தை வீழ்த்துமா தமிழ் சிங்கம்??

singam

ஹிந்தி சிங்கத்துடன் மோதுவது என சூர்யாவும், ஹ‌ரியும் முடிவெடுத்திருக்கிறார்கள். ஹ‌ரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் “யமுடு” என்ற பெய‌ரில் தெலுங்கில் வெளியானதால் தெலுங்கில் அதனை ‌ரீமேக் செய்யவில்லை.

கன்னடத்தில் சுதீப் சிங்கத்தை ‌ரிமேக் செய்து அதில் நடித்தார். படம் பம்பர் ஹிட்.

ஹிந்தியில் ‌ரிலையன்ஸ் தயா‌ரிக்க ரோஹித் ஷெட்டி இயக்க அஜய் தேவ்கான் சிங்கம் ‌ரீமேக்கில் நடித்தார். படம் 100 கோடியை தாண்டி வசூலித்தது. தங்க முட்டையிடும் டைனோசர் இந்த சிங்கம் என்பதை அறிந்து கொண்டவர்கள் தமிழில் சிங்கம் 2 வெளிவரும் முன்பே ஹிந்தியில் சிங்கம் 2 வுக்கான கதையை எழுத ஆரம்பித்தனர்.

தமிழ் சிங்கம் 2 நன்றாக இருந்தால் அதனை ஹிந்தியில் மூன்றாவது பாகமாக எடுக்கலாம், ஆனால் ஹிந்தி சிங்கம் 2 தனது சொந்த கதையாக இருக்க வேண்டும் என்பதில் ரோஹித் ஷெட்டி உறுதியாக இருந்தார்.

இதன் காரணமாக சிங்கம் 2 வை ஹிந்தியில் டப் செய்து வெளியிடுவது என ஹ‌ரியும், சூர்யாவும் தீர்மானித்துள்ளனர்.
சென்னை எக்ஸ்பிரஸை முடித்து சிங்கம் 2 வேலைகளில் பிஸியாக இருக்கிறார் ரோஹித் ஷெட்டி.

உங்களோடதவிட எங்களுதுதான் உசத்தி என்பதை காண்பிக்கவே இந்த ஹிந்தி டப்பிங் முயற்சியாம். பார்க்கலாம் தமிழ் சிங்கமா இல்லை ஹிந்தி சிங்கமாஎது அதிக இரசிகர்களை கவரப் போகின்றது என்று..