புலமைப் பரிசில் பரீட்சையை முன்னிட்டு பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது.
கொவிட் – 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சுகாதார நடைமுறைகளுடன் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஞாயிற்றுக் கிழமை நாடாளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையின் கீழ் வவுனியா நகரசபையினால் நகரசபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
கிருமி நீக்கும் மருந்துகள் விசிறப்பட்டதுடன், கைகழுவுதல் உள்ளிட்ட உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் இதுவரையில் பரவிய கொரோனா வைரஸ் வகைகளை அடையாளம் காண மரபணு நிரலாக்க ஆராய்ச்சி ஒன்றை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆரம்பித்துள்ளது.
டெங்கு பரிசோதனை நிலையத்தில் குறித்த பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த போது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அந்த பரிசோதனைக்கு அமைய இலங்கையில் ஒரே வகையே சேர்ந்த கொரோனா வைரஸ் வகையே காணப்பட்டதாக அடையாளம் காணப்பட்டது.
அது அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வகைக்கு சமமானதாகும். வைரஸ் உருவாகிய சீனாவின் வுஹான் நகரத்தில் பரவிய கொரோனா பீ வகையை சேர்ந்ததாகும்.
மினுவாங்கொட பிரென்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கொரோனா தொற்றியதாக உறுதியாகியதனை தொடர்ந்து இலங்கையினுள் புதிய கொரோனா கொத்தணி ஒன்று உருவாகியுள்ளது.
அதற்கமைய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட குழுவினால் மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைக்கமைய, தற்போதைய தொற்றாளர்களின் உடலில் உள்ள கொரோனா வகையில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதென சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மத ஸ்தாபனம் ஒன்றில் பணி புரியும் வெளி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்படுள்ளது.
நேற்றைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டுநேரிய பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளது.
இந்த நிலையில் குறித்த மத ஸ்தாபனம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, குறித்த நபரை உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்ப மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
மன்னார் மக்கள் காரணம் இன்றி வெளியில் நடமாடுவதை தவிர்ப்பதுடன், சமூக இடைவெளி மற்றும் முக கவசங்களை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படுள்ளது.
வவுனியாவிலிருந்து திருகோணமலைக்கு செல்லும் பிரதான வீதியான ஹொரவப்பொத்தானை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையினால் மாற்றுப்பாதையூடாக பயணிக்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று (09.10.2020) காலை பாரவூர்தி ஒன்று வாகனத்தினை பின்பக்கமாக செலுத்த முற்பட்ட சமயத்தில் வீதியில் காணப்பட்ட அதிஉயர் மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தின் காரணமாக அதிஉயர் மின்கம்பம் உடைந்தது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை மின்சார சபையினர் உடனடியாக மின்சாரத்தினை துண்டித்ததுடன்,
வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன் வவுனியா நகர பள்ளிவாசல் தொடக்கம் இறம்பைக்குளம் வரையிலான பாதையினை மூடி மாற்றுப்பாதையூடாக செல்லுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.
விபத்தினால் சேதமடைந்த அதிஉயர் மின்கம்பத்தினை மாற்றும் நடவடிக்கையில் இலங்கை மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளதுடன் ஹொரவப்பொத்தானை வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்ப 3 மணித்தியாளங்கள் வரை செல்லும் எனவும் தெரிவித்தனர்.
அதிஉயர் மின்கம்பத்தினை மாற்றுவதினால் வவுனியா நகரில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இன்று(09.10) காலை ஏற்பட்ட விபத்தில் மூன்று வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி சென்ற பிக்கப் எதிர் திசையில் வந்த காருடன் மோதியதாகவும் பின்னர் பாரஊர்தியிலும் மோதுண்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பட்டக்காடு பகுதியில் கிணற்றிலிருந்து இராணுவ புலனாய்வாளரின் சடலத்தினை பொலிஸார் மீ ட்டெடுத்துள்ளனர். இன்று (09.10.2020) அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா பட்டக்காடு பகுதியில் போ தை ப் பொ ரு ள் சந்தேக நபர்களை பி டிப்பதாக குறித்த இராணுவ புலனாய்வாளர் சென்ற சமயத்தில் அவர்கள் த ப்பித்து ஓ டியுள்ளனர்.
அவர்களை விரட்டிச் சென்ற சமயத்தில் பொது இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பற்ற பொதுக்கிணற்றில் த வறி வீ ழ்ந்து இராணுவ புலனாய்வாளர் உ யிரிழந்து ள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட வி சாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
கிணற்றில் ச டலம் கிடப்பதனை அவதானித்த அயலவர்கள் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்ததுடன் சடலத்தினை மீ ட்டெடுத்து ள்ளனர்.
பி ரதே ப ரிசோதனைக்காக சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக வி சாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மாத்தறை பகுதியினை சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உ யிரிழந்து ள்ளார்.
வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6முதிரை மரக்குற்றிகளுடன் பட்டா ரக வாகனத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
பாலமோட்டை காட்டுப்பகுதியில் சில நபர்களின் நடமாட்டம் காணப்படுவதாக ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிறு குற்றத்தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி சுகுமார் சுகந் தலைமையிலான பொலிஸார், பாலமோட்டை – ஓமந்தை வீதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது கோவிற்குஞ்சுக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் முதிரைக்குற்றிகளை ஏற்றி வந்த பட்டா ரக வாகனத்தினை பொலிஸார் மறித்தனர். இதன் போது பட்டா ரக வாகனத்தில் பயணித்தவர்கள் வாகனத்தினை அவ்விடத்திலேயே விடுத்து தப்பித்துயோடியுள்ளனர்.
அதன் பின்னர் முதிரைக்குற்றிகளுடன் காணப்பட்ட வாகனத்தினை பொலிஸார் ஒமந்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வந்ததுடன் வாகனத்தின் உரிமையாளரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஒமந்தை பொலிஸார் 6 முதிரைக்குற்றிகளையும் பட்டாரக வாகனத்தினையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஓ ராண்டுக்கு பி ன்னர் த னது சொ ந்த ஊ ருக்கு வ ந்த ந பரை ஒ ருவர் வெ ட் டிக் கொ ன் ற ச ம்பவத்தின் பி ன்னணி வெ ளியாகியுள்ளது.
வேலூர் சலவன்பேட்டை கச்சேரி ஸ்கூல் தெ ருவை சே ர்ந்தவர் கோபி (38). கா ர் ஓ ட்டுனர். இ வருக்கும் அ தே ப குதியை சே ர்ந்த சரவணன் (35) எ ன்பவருடைய ம னைவி ரமணிக்கும் இ டையே தொ டர்பு இ ருந்து வ ந்ததாக கூ றப்படுகிறது.
இ வர்கள் இ ருவரும் க டந்த ஓ ராண்டுக்கு மு ன்பு ஊ ரை வி ட்டு ஓ டி ச் செ ன்றனர். ரமணியை கோபி பெங்களூருக்கு அ ழைத்துச் செ ன்று கு டும்பம் ந டத்தி வ ந்துள்ளார்.
இ தனை க ண் டு பி டி த் த சரவணனுக்கு அ வமானம் ஏ ற்பட்டதோடு கு டும்பத்தில் ப ல பி ரச்சினைகளும் ஏ ற்பட்டுள்ளது. மே லும் ம னைவியை அ ழைத்துச் செ ன்றதால் கோபி மீ து சரவணன் ஆ த் தி ர த் தி ல் இ ருந்து வ ந்துள்ளார். இ தற்கு ப ழி வா ங் க சரவணன் கா த்திரு ந்தார்.
இ ந்த நி லையில் உ றவினர் ஒ ருவரின் து க்க நி கழ்ச்சிக்காக கோபி நே ற்று மு ன்தினம் வேலூர் வ ந்தார். இ தையறிந்த சரவணன் அ வரை கொ லை செ ய் ய தி ட்டமி ட்டார்.
அம்மணாங்குட்டை ப குதியில் கோபி நி ன்றிருந்தபோது அ ங்கு வ ந்த ஒ ருவர் அ வரை க த் தி யா ல் ச ர மா ரி யா க வெ ட் டி வி ட் டு த ப் பி ஓ டி வி ட் டா ர். இ தையடுத்து அ க்கம்ப க்கத்தில் உ ள்ளவர்கள் கோபியை மீ ட் டு ம ருத்துவம னைக்கு சி கிச்சைக்காக கொ ண்டு செ ன்றனர்.
ஆ னால் சி கிச்சை ப லனின்றி அ வ ர் உ யிரிழ ந்தார், இ து கு றித்து பொ லிசார் கூ றுகையில், சரவணன் ம னைவி ரமணிக்கும், கோபிக்கும் தொ டர்பு ஏ ற்பட்டதால் கு டும்பத்தில் பி ர ச் ச னை எ ழுந்தது. பி ன்னர் கோபி, ரமணியை அ ழைத்துக் கொ ண்டு பெங்களூருக்கு செ ன்றார்.
து க்க நி கழ்ச்சிக்கு கோபி வேலூர் வ ந்திருந்தபோது ஓ ராண்டு கா த்திருந்த சரவணன் அ வரை கொ லை செ ய் து ள் ளா ர். இ ந்த ச ம்பவத்தில் சரவணனுக்கு 2 பே ர் உ தவியாக இ ருந்தது தெ ரியவ ருகிறது. மூ வரையும் வ லை வீ சி தே டி வ ருகிறோம் என கூ றியுள்ளனர்.
38 வயதான அதிமுக எம்.எல்.ஏ பிரபு 19 வயது கல்லூரி மாணவியை மணந்து கொண்ட விவகாரத்தில் புதுப்பெண்ணும் அவரின் தந்தையும் நாளை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபுவும், தியாகதுருகம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சௌந்தர்யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
பெண் வீட்டில் திருமணத்துக்கு சம்மதிக்காததால் தனது குடும்பத்தினர் முன்னிலையில் எம்.எல்.ஏ பிரபு காதலியை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் தனது மகளை எம்.எல்.ஏ பிரபுவும், அவரது தந்தையும் சேர்ந்து க ட த் தி ச் சென்று திருமணம் செய்து விட்டதாகவும், தனது மகளை மீட்டு தரக் கோரியும், சௌந்தர்யாவின் தந்தையான கோவில் குருக்கள் சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
படிக்கும் பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி எம்.எல்.ஏ. பிரபு க ட த் தி சென்றுவிட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே தம்மை யாரும் க ட த் த வி ல் லை என்று மணப்பெண் செளந்தர்யா நேற்று முன்தினம் வீடியோ வெளியிட்டார்.
மேலும் செளந்தர்யாவை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யவில்லை என எம்எல்ஏ பிரவும் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் சாமிநாதன் தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வி சாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தனது மனைவியை நாளை மதியம் நேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர் அத்துடன் சுவாமிநாதனும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் பொலிஸார் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசோரியில் கெம்ப்டி நீர்வீழச்சி அருகேயே இந்த ப யங்கர விபத்து நடந்துள்ளது.
இந்தோ-திபெத் எல்லை பொலிஸார் பயணம் செய்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த உணவகத்தின் மீது மோ தி விபத்துக்குள்ளாகி அ ந்தரத்தில் தொங்கியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த 41 வீரர்களும் பத்திரமாக மீ ட்கப்ப ட்டுள்ளனர். யாருக்கும் கா யம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பிரேக் பிடிக்காததே விபத்திற்கான காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்திற்கு பின்னர் கட்டிடத்தில் சி க் கி அந்தரத்தில் தொங்கும் பேருந்தை பொலிஸார் மீ ட் கு ம் புகைப்படம் வெளியாகியுள்ளது.
யாழ்.பல்கலைகழக 2ம் வருட, 3ம் வருட மா ணவர்களுக்கி டையில் இ டம்பெற்ற த ர்க்கம் தொ டர்பாக யாழ்.பல்கலைகழக துணைவேந்தரிடம் தெரிவித்து த ர்க்கத்தை சுமுகமாக தீர்ப்பதற்காக முயற்சித்தபோது துணைவேந்தர், விரிவுரையாளர்கள் சிலர் மற்றும் காவலாளி ஆ கியோர் மா ணவர்கள் மீ து தா க் கு த ல் ந டத்தியதாக மா ணவர்கள் கு ற்றம் சு மத்தியு ள்ளனர்.
இன்றைய தினம் மாலை பல்கலைகழக மாணவர்கள் சி லருக்கி டையில் த ர்க்கம் இ டம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக மா ணவர்கள் பல்கலைகழக நிர்வாகத்தை நாடியுள்ளனர்.
இதன்போது த ர்க்கத்தை சுமுகமாக தீர்க்க முயன்றபோது காவலாளி மற்றும் விரிவுரையாளர்கள், த ம் மீ து தா க் கு த ல் ந ட த் தி ய தா க கூறிய மா ணவர்கள், துணைவேந்தர் தா க் கி ய தா க மா ணவர்கள் கு ற்றம் சா ட்டியுள்ளனர்.
அத்துடன் பல்கலைகழகத்திற்குள் அ திரடிப்ப டை மற்றும் பொலிஸாரை அழைப்போம் என துணைவேந்தர் அ ச் சு று த் தி ய தா க வு ம், அ தற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் மாணவர்கள் கூறியிருக்கின்றனர்.
மேலும் விரிவுரையாளர்கள் பரீட்சையில் புள்ளியிட மாட்டோம் எனவும், பல்கலைகழகத்தில் இருந்து வெளியேற்றுவோம் எ னவும் அ ச் சு று த் தி ய தா க வு ம் மா ணவர்கள் கூ றுகின்றனர்.
மினுவாங்கொட, பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் தங்களை பதிவு செய்துக் கொள்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின் இறுதி தினம் இன்றாகும்.
மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றியவர் இருப்பின் உடனடியாக தங்களை பதிவு செய்துக் கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதுவரை பதிவு செய்துகொள்ளாத, பிரென்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை உடனடியாக தங்களின் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரித்துள்ளார்.
தகவல்களை மறைத்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால் சொத்துக்கள் அனைத்தும் தடை செய்யப்படும் அல்லது அரசுடமையாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த தொழிற்சாலையில் பாரிய கொரோனா கொத்தணி ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் 1700இற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றியவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 1030 பேருக்கு கொரோனா ரைவஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் இன்றும்(08.10), நாளையும் மாகாணம் தழுவிய ரீதியில் சுகவீன விடுப்பு போ ராட்டத்தில் குதித்துள்ளனர்.
சுகாதார சேவைக்குள் கடைமையாற்றிவரும் சாரதிகளை சுகாதார துறைகள் தவிர்ந்த வேறு திணைக்களங்களிற்கு இடமாற்றம் வழங்குவதற்கு எ திர்ப்பு தெரிவித்தே குறித்த சுகவீன விடுப்பு போ ராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (08.10.2020) காலை 10.00 மணியளவில் சுகாதார சேவைகள் சாரதிகள் எட்டு மாகாணத்திலும் இல்லாத நடைமுறை வடமாகாணத்தில் மட்டும் ஏன்?,
வடமாகாண சுகாதார சேவைகளின் சாரதியை இடமாற்றுவதை உடன் நிறுத்து, யு த் த காலத்தில் தேவைப்பட்ட நாம் இப்போது விலக்கப்படுவது ஏன்?, இலங்கைக்கு ஜனாதிபதி ஒருவர் வடமாகாணத்திற்கு ஏன் இப்படி போன்ற பதாதைகளை ஏந்தியவாறு தமது எ திர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் எப்பகுதியிலும் இல்லாத நடைமுறை வடக்கு மாகாணத்தில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடந்த 35 வருடங்களாக சுகாதார சேவைகள் தவிர்ந்த வேறு திணைக்களங்களுக்கான இடமாற்றங்கள் எமக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.
தற்போது 35 வருடங்கள் கழித்து இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் 8 மாகாணங்களில் இல்லாத நடைமுறை வடக்கு மாகாணத்தில் மாத்திரம் கொண்டுவரப்பட்டுள்ளமையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இது தொடர்பாக அனைத்து தரப்பிலும் எமது கோரிக்கையை முன்வைத்த நிலையில் எமக்கான சரியான தீர்வினை எவரும் வழங்கவில்லை. எனவே எமது கோரிக்கையை முன்னிறுத்தி வடமாகாணம் தழுவிய ரீதியில் இன்றையதினம் (08.10) காலை முதல் சுகவீன விடுப்பு போ ராட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன்,
தற்போது ஏற்பட்டுள்ள கொவிட்-19 பரவல் காரணமாக மக்களினதும், நோயாளிகளினதும் நலன்கருதி அம்புலன்ஸ் வாகன சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் குறித்த சுகவீன விடுப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
வவுனியா மன்னார் வீதியில் கலைமகள் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த வாகன விற்பனையகம் வவுனியா பொலிஸாரின் உத்தரவிற்கமைய மூடப்பட்டது.
கோவிட் – 19 தொற்று காரணமாக நாடு முழுவதும் இம்மாதம் 31ம் திகதி வரை நிகழ்வுகள் , இசை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு அரசாங்கத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று (08.10.2020) வவுனியா மன்னார் வீதியில் கலைமகள் மைதானத்தில் தனியார் நிதி நிறுவனத்தினால் வாகன விற்பனை சந்தை ஒன்று திறக்கப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் தடையுத்தரவினை மீறி திறக்கப்பட்ட வாகன விற்பனையகம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு பொலிஸாருக்கு வழங்கிய உத்தரவின் பேரில் அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் வாகன விற்பனையகத்தினை உடனடியாக மூடுமாறு உத்தரவு பிறப்பித்தனர்.அதனையடுத்து வாகன விற்பனையகம் மூடப்பட்டது.
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் பட்டா ரக வாகனமும் – முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (08.10) மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம், அம்மன் கோவில் வீதியில் இருந்து பாடசாலை வீதிக்கு திரும்பிய பட்டா ரக வாகனமும், பாடசாலை வீதி ஊடாக வைரவபுளியங்குளம் நோக்கி வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து குறித்து வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பில் உள்ள ஐ.சி.பி.டி தனியார் உயர் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.சி.பி.டி தனியார் உயர்கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நிலையத்தில் கல்விகற்கும் குறித்த மாணவர் கடந்த 4ஆம் திகதி கொழும்பிலுள்ள உயர்கல்வி நிறுவனத்திற்கு வருகைதந்திருக்கின்றார்.
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதாகவும் குறித்த மாணவரின் வகுப்பைச் சேர்ந்த ஏனைய மாணவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளும் உடனடியாகவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்லது அதற்குப் பின்னர் கொழும்பிலுள்ள குறித்த உயர்கல்வி நிறுவனத்திற்கு எவரேனும் வருகைதந்திருப்பின் உடனடியாக அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு குறித்த நிறுவனம் வலியுறுத்தியிருக்கின்றது.