நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்!!

அவசர அறிவித்தல்..

நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பொருட்களைக் கொள்வனவு செய்ய அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்ய அவசர நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக, தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் நிலைமையை அபாயத்துக்கு உள்ளாக்கும் என்பதால் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இவ்வாறான சூழ்நிலைகளில் நாட்டில் பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டிய முறையை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, அச்சமடையவோ, பொருட்களைக் கொள்வனவு செய்யவோ அவசரப் படவோ வேண்டாம் எனவும் தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

 

மீண்டும் நாடு முடக்கப்படுமா? : தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் விளக்கம்!!

மீண்டும் நாடு முடக்கப்படுமா?

கம்பஹா – திவுலப்பிட்டி பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்புகளைப் பேணியவர்களில் 69 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்று திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆடை தொழிற்சாலையில் குறித்த பெண்ணுடன் தொழிபுரிந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

பி.சி.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். எனவே எதிர்வரும் அடுத்து நாட்களில் காணப்படும் நிலைவரங்களின் அடிப்படையிலேயே நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா என்பது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

வவுனியாவில் இயற்கைச் சூழலை நாசப்படுத்தி களியாட்டங்கள் வேண்டுமா?

சுவரொட்டிகள்..

குளத்தை காப்பாற்ற வேண்டியவர்களே ஆக்கிரமிப்பிற்கு துணை போவதா போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய சுவரொட்டிகள் வவுனியா நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகள் இன்று (05.10.2020) காலை தொடக்கம் வவுனியா நகர், கண்டி வீதி, மன்னார் வீதி, நூலக வீதி, வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டு காணப்பட்டன.

நிலத்தடி நீருக்கும் நெல் உற்பத்திக்கும் ஆப்பு வைப்பதா அபிவிருத்தி?, இயற்கைச் சூழலை நாசப்படுத்தி களியாட்டங்கள் வேண்டுமா?, வவுனியா நகரசபையே வவுனியாக் குளத்தைக் கூறு போட்டு விற்காதே,

நீர்ப்பாசனத் திணைக்களமே குளத்தை காப்பாற்ற வேண்டியவர்களே ஆக்கிரமிப்புக்கு துணை போவதா போன்ற வாசகங்களை தாங்கிய சுவரொட்டிகளே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன.

வவுனியாக் குளத்திற்கான மக்கள் செயலனி என சுவரொட்டியின் கீழ் உரிமை கோரப்பட்டுள்ளது.

வவுனியாவில் தீப் பரவல் : விரைந்து செயற்பட்ட தீயணைப்புப் படை!!

தீப் பரவல்..

வவுனியா – நவகம பகுதியில் ஏற்பட்ட தீப் பரவலை கட்டுப்படுத்தி அயலில் இருந்த வீடுகளுக்கு தீயை செல்லவிடாது வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தடுத்துள்ளனர். நேற்று மாலை வவுனியா – நவகமவில் வயல் பகுதியில் தீ பரவியுள்ளது. இத் தீயானது தண்டவாளம் வரை பரவியிருந்தது.

வடபகுதிக்கான தண்டவாளங்களுக்கு அருகேயுள்ள பாலங்களை ஊழியர்கள் சீர்செய்து வருகின்றனர். நவகம பாலம் வேலை செய்வதற்காக பாலத்திற்கு அருகே வைத்திருந்த மரங்களும் தீக்கிரையாகியிருந்தன.

அருகில் இருந்த மக்கள் குடிமனைக்குள் பரவாதவாறு அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட வவுனியா தீயணைப்பு பிரிவினர் மக்கள் குடிமனைக்குள் தீ பரவலடையாது தடுத்ததுடன், வயல் பகுதியில் ஏற்பட்ட தீப் பரம்பலையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை ஈரட்டை பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

யாழில் கரையொதுங்கிய ஆணின் சடலம் : பொலிஸார் தீவிர வி சாரணை!!

யாழில்..

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, அல்லைப்பிட்டி வெண்புறவிநகர் கடற்கரையில் ஆண் ஒருவரின் ச டலம் கரையொதுங்கியுள்ள்து.

கடந்த மாதம் 30ம் திகதி இந்தியா தமிழ்நாடு – இராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கடலில் தவறி வி ழுந்ததாகவும், குறித்த ச டலம் அவருடையதாக இருக்கலாம் என ச ந்தேகிப்பதாகவும் ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஊர்காவல்துறை பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியாவில் து ப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!!

ஒருவர் கைது..

வவுனியா பன்றிக்கெய்தகுளத்தில் விலங்குகளை வே ட்டையாடுவதற்கு பயன்படும் ச ட்டவி ரோத து ப்பாக் கிகளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா பன்றிக்கெய்தகுளத்தில் வீடு ஒன்றில் சட்ட வி ரோதமாக து ப்பாக் கிகளை (இடியன் து வக்கு) ம றைத்து வைத்திருப்பதாக ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து,

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட தே டுதல் நடவடிக்கையில் நான்கு ச ட்ட வி ரோத து ப்பா க்கிகள் மீ ட்கப்ப ட்டதுடன் அதனை தமது உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வி லங்குகளுக்கு வை க்கப் பட்ட பொ றியில் சி க் கி இரண்டு பெ ண்கள் ப ரிதாபமாக ப லி!!

ஹம்பதெனிய..

வி லங்குகளை வே ட்டையா டுவதற்கு அ மைக்கப்பட்ட மி ன் இ ணைப்பில் சி க் கி உ யிரிழந்த இ ரண்டு பெ ண்களின் ச டலங்கள் நே ற்று மீ ட் க ப் ப ட்டு ள்ளன.

இ ந்த ச ம்பவம், மாவனெல்ல – ஹேமத்தகம, ஹம்பதெனிய ப குதியில் இ டம்பெற்று ள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர். சு மார் நா ன்கு நா ட்களுக்கு மு ன் கு றித்த பெ ண்கள் உ யிரிழந்தி ருக்க கூ டும் எ ன பொ லிஸார் ச ந்தேகம் வெ ளியிட்டு ள்ளனர்.

இ ந் நி லையில், ச ட்டத்தில் இ ருந்து த ப் பி க் க மு யன்ற ஒ ருவர் கை து செ ய்யப்பட்டு ள்ளதாகவும் பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர். ச ட்ட ந டவடிக்கை களில் இ ருந்து த ப் பி க் கு ம் ந ம்பிக்கையில்,

ச டலங்களை ம றைக்க ந டவடிக்கை எ டுத்ததாக ச ந்தேக ந பர் பொ லிஸ் வி சார ணையின்போது, தெ ரிவித்தி ருந்தார். இ ந் நி லையில், ச ம்பவம் தொ டர்பில் பொ லிஸார் மே லதிக வி சாரணைகளை மு ன்னெடுத்து ள்ளனர்.

வவுனியா மாவட்ட வர்த்தகர்களுக்கு வர்த்தகர் சங்கம் விடுத்துள்ள அறிவித்தல்!!

அறிவித்தல்..

இலங்கையில் தற்போது கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டில் சில மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு ஆலோசனைகள் தொடர்பில் பொலிஸ் மற்றும் சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக வவுனியா பொலிஸாரின் உத்தரவிற்கமைய கோவிட் – 19 தொற்றின் தாக்கத்திலிருந்து எம்மையும் எமது மக்களையும் காப்பாற்றுவதற்கு அனைத்து வர்த்தக நிலையத்தினைரையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வவுனியா வர்த்தகர் சங்கத்தினர் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.

கோவிட் – 19 சுகாதார நடைமுறையினை மீறும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் வர்த்தகர்கள் ஆகிய நாமும் எமதும் பொதுமக்களின் நலனில் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்

எனவே வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கைகழுவும் வசதிகள் அல்லது தொற்று நீக்கி மருந்து கட்டாயம் வைப்பதுடன் வர்த்தக நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதுடன் 3மீற்றர் சமூக இடைவெளியினை பின்பற்றி கோவிட் -19 தொற்று அற்ற வவுனியாவை உருவாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு வர்த்தகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் இன்று (05.10.2020) தொடக்கம் கோவிட் -19 சுகாதார நடைமுறையினை பொதுமக்கள் , வர்த்தக நிலையங்கள் பின்பற்ற வேண்டுமென வவுனியா பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பணியாற்றிய இடத்தில் மேலும் பலருக்கு சுகயீனம்?

கொரோனா..

கம்பஹா – மினுவங்கொட பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய பெண் பணியாற்றிய முன்னணி ஆடை தொழிற்சாலையில் 40க்கும் மேற்பட்டவர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இவர்களில் பலரும் அண்மையில் விடுமுறைகோரி விண்ணப்பித்திருந்ததாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 பேர் இங்கு பணியாற்றுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், 40க்கும் மேற்பட்டவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண் மினுவங்கொட – பாதுராகொட பகுதியில் இருந்து பயணிக்கும் வாகனத்தில் வேலைக்குச் செல்வதாகவும், அந்த வாகனத்தில் 35 பேர் பயணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண், 20 பேரின் வேலைகளை மேற்பார்வை செய்யும் கடமையில் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் ஏராளமான மக்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.

இந்த நிலையிலேயே, குறித்த தொழிற்சாலையில் பணிபுரியும் போது பெண் உடல்நிலை சரியில்லாமல் 30ம் திகதி கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒக்டோபர் 1ம் திகதி, பி.சி.ஆர். பரிசோதிக்கப்பட்ட இரண்டாவது நாளில் அவர் வீடு திரும்பினார், எனினும் 3ம் திகதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், குறித்த பெண் கொழும்பு ஐடிஎச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 5 இளைஞர்கள் அதிரடியாக கைது!!

5 இளைஞர்கள் கைது..

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆடு, மாடுகளை களவாடிய 5 இளைஞர்களை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பண்டாரிக்குளம் பகுதியில் மாடொன்றும் மகாறம்பைக்குளம் பகுதியில் பெரிய இன ஆடோன்றும் கா ணாமல் போன நிலையில் அவற்றின் உரிமையாரினால் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுனில் சாந்த அவர்களின் வழிகாட்டலில் அமைக்கப்பட்ட பொலிஸ் குழுவினர் வி சாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதன் போது தேக்கவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் ச ட்டவி ரோதமான மாட்டியினை வெ ட் டி ய கு ற்றச்சாட்டில் அதே பகுதியினை சேர்ந்த 21,22 வயதுடைய இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட வி சாரணையின் போது குறித்த பண்டாரிக்குளத்தில் மாட்டினை க ளவாடியதாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

அத்துடன் மகாறம்பைக்குளத்தில் பெரிய இன ஆட்டினை விற்பனை செய்த சமயத்தில் மகாறம்பைக்குளம் பகுதியில் வைத்து அதே பகுதியினை சேர்ந்த 27,28,29 ஆகிய வயதுகளை சேர்ந்த மூன்று இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட வி சாரணையின் போது குறித்த மகாறம்பைக்குளத்தில் ஆட்டைனை களவாடியதாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

கைப்ப ற்றப்பட்ட மாட்டின் இறைச்சி மற்றும் ஆடு ஆகியவற்றினையும் ஐந்து சந்தேக நபர்களையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

திவுலப்பிட்டிய பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று : பாடசாலை மாணவர்கள் 31 பேர் தனிமைப்படுத்தல்!!

பாடசாலை மாணவர்கள் 31 பேர் தனிமைப்படுத்தல்..

கம்பஹா – திவுலப்பிட்டியவில் கொரோனா தொற்றுக்கு பெண் ஒருவர் இலக்காகிய நிலையில், அவரது 16 வயதான மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி கொழும்பிலுள்ள ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சிறுமி கல்விகற்ற பாடசாலையில் 31 மாணவர்களும் அவர்களின் குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த மாணவி அந்த பகுதியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் முழுவதும் அவர் பாடசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த மாணவியின் சக வகுப்பு மாணவர்கள் 31 பேரும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும், ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த மாணவி மற்றும் அவரின் தாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

சில நாட்கள் காய்ச்சல் : சிகிச்சை பலனின்றி மாணவன் உ யிரிழப்பு!!

சில நாட்கள் காய்ச்சல்..

காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று ம ரணமடைந்துள்ளார். வாழைச்சேனையில் உள்ள பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்றுவந்த 13 வயதுடைய, பதுரியா குறுக்கு வீதி பிறைந்துறைச்சேனையை சேர்ந்த சமீம் முகம்மட் சஜாத் எனும் மாணவனே உ யிரிழந்து ள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளபோதும் குறித்த மாணவன் இன்று ம ரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நீர்கொழும்பு கடலில் மா யமான இளைஞர்கள் மூவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

நீர்கொழும்பு கடலில்..

நீர்கொழும்பு கடலில் குளிக்கச் சென்று கா ணாமல்போன மூன்று இளைஞர்களில் இருவர் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை ஸ்டேலின் தோட்டத்தைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது முத்துகுமார் சிந்துஜன் வயது (24) மற்றும் மனோகரன் சசிகுமார் வயது(22) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர்கள் கொழும்பிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று மாலை குளிப்பதற்காக தனது ஏழு நண்பர்களுடன் நீர்கொழும்பு கடலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் தீடீரென அலைக்குள் சி க்குண்டு கடலினுள் இழுத்துச் செல்லப்பட்டு கா ணாமல் போயுள்ளனர்.

கா ணாமல்போன இளைஞர்கள் மூவரில் மற்றுமொருவர் பதுளை, நமுனுகல பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கா ணாமல்போனவர்களை தேடும் பணிகளை நேற்று மாலை கடற்படையினரும் சுழியோடிகளும் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து மேலதிக வி சாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

புகையிரதங்களில் முகக்கவசம் அணியாதோருக்கு எதிராக அமுலாகும் புதிய சட்டம்!!

முகக்கவசம்..

கொரோனா அ ச்சுறுத்தல் காரணமாக பயணிகள் முகக்கவசம் அணிதல் முக்கியமானது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் காணப்படும் அ ச்சுறுத்தலான நிலைமை காரணமாக பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சகல தொடரூந்து நிலையங்களிலும் முன்னர் அறிவிக்கட்டப்பட்டவாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அதனை தவறுபவர்களை தொடருந்து நிலையங்களுக்குள் அனுமதிக்க வேண்டாம் எனவும் தொடருந்து திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது.

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பெண் பணியாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டதினைத் தொடர்ந்தே இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் மீண்டும் கொரோனா : கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள்!!

மீண்டும் கொரோனா..

இலங்கையில் சமூக மட்டத்தில் இனங்காணப்பட்ட கொரோனா பரவலையடுத்து, கம்பஹா மாவட்டத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ் ஊரடங்கு உத்தரவுகள் காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும், விமான நிலைய நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சில கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் மற்றும் வருகை தரும் முனையங்களில் அமைந்துள்ள வணிக நிலையங்களுக்கான வெளியாட்கள் நுழைவுக்கு பிற்பகல் 12.00 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய நிர்வாகம் விமான நிலையத்தின் வருகை முனையம் மற்றும் வருகை முனையத்தின் நுழைவாயிலை மூடுவதற்கும், பொதுமக்கள் பார்வையாளர் அரங்கம் மற்றும் ஓய்வறைகள் என்பவற்றை மூடுவது தொடர்பான தீர்மானம் நாளை எடுக்கப்படவுள்ளது.

 

சமூக மட்டத்தில் மீண்டும் கொரோனா : கொழும்பு, கம்பஹாவில் அமுலாகும் தடை!!

மீண்டும் கொரோனா..

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கம்பஹாவில் கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், நாளை முதல் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை மூடுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளும் பொருந்தும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்திற்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்திலும் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கும் மீள் அறிவிப்பு வரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.