கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்துக்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அங்கிருந்த அனைத்து கொரோனா நோயாளர்களும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், நோய் அறிகுறிகள் கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக சிகிச்சை வழங்குவதற்காக புலனாய்வு பிரிவினர் 24 மணித்தியாலங்களும் தயார் நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமையின் கீழ் கந்தகாடு கொரோனா கொத்து முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளமையினால் நாட்டை மூட வேண்டிய எந்த அவசியமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மேலும் சில நோயாளிகள் அடையாளம் காணப்பட வாய்ப்புகள் உள்ளமையினால் மேற்கொள்ள வேண்டிய அனைத்து செயற்பாடுளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கந்தகாடு கொரோனா கொத்து தொடர்பில் ஊடகத்திற்கு கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வவுனியா கண்டி வீதியில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனம், வவுனியாவில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டையிழந்து அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துகொண்டிருந்த முதியவருடன் மோதி வீதி கரையில் இருந்த உயர் அழுத்த மின்சார தூணுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் உயர் அழுத்த மின்சார தூண் முழுமையாக சேதமடைந்த நிலையில் வாகனத்தின் மீது சரிந்து விழுந்தது. எனினும் உடனடியாக விரைந்து வந்த மின்சார சபை ஊழியர்கள் மற்றும் பொலிஸாரின் செயற்பாட்டால் பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருந்தது.
குறித்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ரட்ணசிங்கம் எனும் 59 வயதுடைய முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புபட்ட செய்தி 28.06.2020 : வவுனியா கண்டி வீதியில் கோர விபத்து : ஒருவர் படுகாயம்!!
வவுனியா, கண்டிவீதியில் சிறிய ஹன்ரர் ரக வாகனமும், துவிச்சர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று(28.06.2020) காலை வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றது. இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி மீன்களை ஏற்றிசென்ற சிறிய ஹன்ரர் ரக வாகனம், வவுனியாவில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக சென்று கொண்டிருந்த போது,
அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரமாக இருந்த உயர் அழுத்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் உயர் அழுத்த மின்சார கம்பம் முழுமையாக சேதமடைந்த நிலையில் வாகனத்தில் மீது முறிந்து விழுந்தது. பொலிசார் அறிவித்ததைத் தொடர்ந்து உடனடியாக விரைந்து செயற்பட்ட மின்சார சபை ஊழியர்கள்,
அப் பகுதிக்கான மின் இணைப்பை துண்டித்ததுடன், வாகனம் தீப்பற்றி எரியாத வகையில் நீர்தாங்கி மூலம் பொலிசாரால் தண்ணீரும் விசிறப்பட்டது. இதன் மூலம் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.
இவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த மகேஸ்வரன் ரட்ணசிங்கம் (வயது 59) என்ற முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று (13.07.2020) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையிலும் காலை 8.30 மணி தொடக்கம் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் ஊழியர்கள் முகக்கவசம் அணிந்தவண்ணமும் கைகளை சுத்தம் செய்ததின் பின்னருமே வாக்களிப்பு நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
எதிர்வரும் 17 ஆம் திகதி வரை கட்டம் கட்டமாக தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் முப்படையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன்,
16 மற்றும் 17 ஆம் திகதிகளில் முப்படையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகியோரும் இந்த 5 நாட்களிலும் வாக்களிக்க முடியாத அரச உத்தியோகத்தர்கள், தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்திலிருக்கும் தேர்தல் காரியாலயத்தில் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன்ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வன்னியில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்ய 2 இலட்சத்து 87 ஆயிரத்து 13 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிய நபர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களை அடையாளம் கண்டு, அந்த பிரதேசங்களுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் சேனால் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய சந்தர்ப்பத்தில் சரியான தீர்மானங்களை எடுக்காது போனால், நாட்டை மீண்டும் மூட நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், நாடு அப்படியான இடத்திற்கு மீண்டும் செல்வதை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று கையளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,இலங்கையில் திடீரென கொரோனா வைரஸ் பரவலின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று அது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நோயாளர்கள் வெளிநோயார் பிரிவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இன்றையதினம் (13.07.2020) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வருகை தந்த நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவில் இருக்கைகள் இருக்கின்ற போதிலும் கடும் வெயிலுக்கு மத்தியில் வரிசையில் நின்று சேவைகளை பெற்றமையினை அவதானிக்க கூடியதாகவிருந்தது.
தமக்கு சுகயீனம் என்பதினால் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்களை வைத்தியசாலை சமூகத்தினர் வெயிலுக்குள் வரிசையில் நிற்க வைத்திருந்தமை மனவேதனையளிக்கும் விடயமாகும்.
நோயாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சமூக வலைத்தளம் ஊடாக பல்வேறு போலித் தகவல்களை பரப்பும் நபர்கள் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அவ்வாறான நபர்களுக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் தொடர்பில் போலியான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு மையம் மற்றும் அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடும் தகவல்களை மாத்திரம் நம்புமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் அரச ஊழியர்களுக்கு தொடர் விடுமுறை என பரவிய போலி தகவல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் தங்காலை பட்டிபொலி பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு நெருக்கமாக செயற்பட்ட உறவினர்கள் உட்பட 7 பேரும் வர்த்தக நிலையங்கள் இரண்டின் உரிமையாளர்கள் உட்பட 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நபர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றியவர் என காலி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் விடுமுறை பெற்று கடந்த 5ஆம் திகதி தங்காலை வீட்டிற்கு வந்துள்ளார். அவர் பல நாட்களாக நகரின் பல இடங்களுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக அவர் பயணம் செய்த இடங்களில் இருந்த நபர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பல இடங்களில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கந்தக்காடு இராணுவ முகாமில் பணியாற்றும் வவுனியா மடுக்கந்தைப் பகுதியில் வசித்துவரும் இராணுவச் சிப்பாயக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினை இன்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கந்தக்காடு இராணுவ முகாமில் சாரதியாக பணியாற்றும் வவுனியா மடுகந்தை பகுதியை சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் விடுமுறையில் வீட்டிற்கு வந்து நேற்று முன்தினம் கந்தக்காடு இராணுவ முகாமிற்கு திரும்பி சென்றுள்ளார்.
அதனையடுத்து மேற்கொண்ட கொரோனா மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கெரரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று வவுனியாவிலுள்ள அவரது மனைவி, தாயார், மகள், உறவினர் உட்பட நான்கு பேர் பேருந்தில் தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் நாட்டில் சிக்கியுள்ள இலங்கைப் பெண்ணொவர், தனது உ யிரை கா ப்பாற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். காணொளி தொலைபேசி அழைப்பின் மூலம் அவர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
குவைத் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வரும் இந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த பெண் தொழில் புரியும் வீட்டின் உரிமையாளர்கள், பெண்ணுக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடுகளை செய்யாது த னி அ றையில் அ டைத்து வை த்து கொ டுமைப்படுத்து வதாக அந்த பெ ண் அ ழுதவாறு கூறியுள்ளார்.
தன்னை அ டைத்து வை த்து கொ டுமைப்படுத்துவதாகவும் ம யக்கம் ஏற்படுவது போல் உணர்வதாகவும் தான் இ றக்கும் முன்னர் தன்னை கா ப்பாற்றுமாறும் தனக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் அந்த பெண் காணொளியில் தெரிவித்துள்ளார்.
வவுனியா பம்மைபடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று (12.07.2020) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகள் முடிவுகள் இரவு 8.30 மணிக்கு வெளியாகிய நிலையில் இக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் வவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த 32 பேருக்கும் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 55 பேருக்கும் என மொத்தமாக 87 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் வவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை யாழ்ப்பான போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மத்தியபிரேதேசம் மாநிலத்தில் உள்ள பெட்டுல் மாவட்டத்தில் ஜிஹாரடோங்கிரி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் யுகே. இவர் அங்குள்ள போபால் ஹோஷங்காபாத் பகுதியில் படித்து வந்த போது, அவருக்கு அப்பகுதியில் உள்ள பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்த நிலையில், சந்தீப்பிற்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்த பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளனர். நண்பர்களாக இருந்த இருவருக்கும் இந்த நட்பு தொடர வேண்டும் என்ற ஆவல், காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் விழிபிதுங்கிய நிலையில், இவர்களின் காதல் திரைப்பட பாணியில் புரிவதற்குள், சந்தீப்பிற்கு பெற்றோர் வரன் பார்த்து திருமணத்தை பேசி முடித்துள்ளனர்.
இதன்பின்னர் சந்தீப் தனது தோழி குறித்து தனது காதல் பற்றி பெற்றோரிடம் கூறினார். இதனை அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், திருமணத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் மூன்று குடும்பமும் ஒன்று சேர்ந்து பேசி முடிவெடுத்து, சந்தீப்பிற்கு இரண்டு பெண்களையும் மணமுடிக்க தீர்மானித்துள்ளனர். இதற்கு இரண்டு பெண்மணிகளும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த 29 ஆம் திகதி அன்று இவர்களின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இதனை அடுத்து இந்த திருமண விவகாரம் ஜிஹாரடோங்கிரி கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இரண்டு திருமணம் முடிப்பது சட்டப்படி குற்றம் என்பதை அவர் குறிப்பிட்டுள்ள நிலையில்,அனைவரின் விருப்பத்துடனேயே இந்த திருமணம் நடைபெற்றது என்பதை கூற புதுமண ஜோடிகள் காவல் நிலையத்தில் காத்துகொண்டு உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
முதல் முறையாக நேற்றைய தினம் பாடசாலை மாணவி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜாங்கனை பிரதேசத்தில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவிக்கே தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் 5, 11 மற்றும் 13ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடசாலை கற்கை நடவடிக்கைகள் ஆரம்பமாகியது.
அதற்கமைய கடந்த வாரத்தில் 3 நாட்கள் குறித்த மாணவி பாடசாலைக்கு சென்றுள்ளார். இந்த மாணவியின் தந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகராக செயற்பட்டுள்ளார்.
குறித்த மாணவியின் தந்தை முதல் முறையாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். அத்துடன் அவரது ஒன்றரை வயது மகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் அவரது 11 வயது மகளுடன் நெருங்கி செயற்பட்டவர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் ராஜாங்கனவை அண்டிய பிரதேசங்களுக்கு பயண தடை செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுர பிரதேசத்தின் தொற்று நோய் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனை அறிக்கை முடிவுகளுக்கமைய குறித்த பிரதேசத்திற்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவில் 35 வயது வளர்ப்பு தாயை அவரின் 20 வயது மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
Marina Balmasheva என்ற 35 வயது பெண்ணுக்கும் அவர் கணவர் Alexey Shavyrinக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது.
இந்த நிலையில் தனது வளர்ப்பு மகனான 20 வயது Vladimir “Vova” Shavyrinஐ Marina சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். Shavyrinல் கர்ப்பமான நிலையிலேயே Marina அவரை மணந்துள்ளார்.
இதையடுத்து முதல் கணவரை அதிகாரபூர்வமாக Marina பிரிந்துள்ளார், இதனால் தனது 5 குழந்தைகளையும் தனியாக வளர்க்கும் நிலைக்கு Alexey தள்ளப்பட்டுள்ளார்.
இந்த திருமணம் குறித்து Marina கூறுகையில், சட்டபூர்வமாக நானும் Shavyrinம் திருமணம் செய்து கொண்டுள்ளோம்.
மிக எளிமையான முறையில் தான் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளனர். அதே சமயம் இந்த உறவு ஒழுக்கக்கேடானது என்று பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
திடீரென இலங்கையில் அதிகரித்த கொரோனா பரவலை அடுத்து நாடு மீண்டும் ஸ்தம்பிக்கப்படவுள்ளநிலையில் உள்ளது.
இந்நிலையில் நாளை முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர் மத்தியில் ஏற்பட்ட அச்ச நிலைமை காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மூன்று மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், நான்கு கட்டங்களின் கீழ் கடந்த 29ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது
கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய செய்தி : இலங்கையில் கொரோனா தீவிரம் : பாடசாலை விடுமுறை குறித்து கல்வியமைச்சு அறிவிப்பு!!
கொரோனா தீவிரம்..
நாட்டின் நிலைமை மோசமானால் அனைத்து பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று தொடர்பான சுகாதார நிலைமையை உறுதிப்படுத்தும் விதமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் கல்வி அமைச்சு தீவிர அவதானத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கல்வி கற்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தற்போதைய நிலைமை மேலும் மோசமடைந்தால் பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் மூடப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் இரண்டாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த அருங்காட்சியகத்தை கடற்படைத் தளபதி பியல் டி சில்வா நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சென்டி பே கடற்கரை கவருவதால், அக்கடற்கரையை அண்டியதாக இந்தக் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது எனக் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுமார் 60 அடி ஆழத்தில் 150 அடி நீளத்தில் 85 அடி அகலத்தில் குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதியின் முழுமையான மேற்பார்வையின் கீழ், கடற்படையினரின் பூரண ஒத்துழைப்புடன் குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதி பவளப்பாறைகள் உருவாகுவதை ஊக்குவிக்கும் என்பதோடு, மீன்வளத்தை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் தற்போது இப்பிரதேசத்தை அண்டிய பகுதியில் மீன் இனப்பெருக்கம் ஆரம்பமாகியுள்ள நிலையில்,
மிக விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு இப்பிரதேசத்தில் சுழியோடுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும். ஆயினும், இப்பகுதியில் தற்போது மீனவர்கள் தொழிலில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், மீன் இனப்பெருக்கப் பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டவுடன், மீனவர்களுக்கு உச்சபட்ச நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும் எனவும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் நீந்துபவர்களுக்கும் நீராடுபவர்களுக்கும் தனித்துவமானதொரு பார்வையிடும் அனுபவத்தை குறித்த அருங்காட்சியகம் வழங்கும் எனவும் கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்காலத்தில் இதுபோன்ற மற்றுமொரு நீருக்கடியிலான அருங்காட்சியகத்தை, தங்காலை பிரதேசத்தில் நிர்மாணிக்கக் கடற்படை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே காலி பகுதியில் இலங்கையின் முதலாவது அருங்காட்சியகத்தை கடற்படையினர் நிர்மாணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 29 பேர் இன்று(12.07.2020) விடுவிக்கப்பட்டனர்.
பங்களாதேஸ் நாட்டில் சிக்கியிருந்தவர்களில் இலங்கை அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்ட ஒரு தொகுதியினர் கடந்த 27 ஆம் திகதி வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து விடுவிக்கப்பட்பட்டனர்.
இதன்போது தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் கொழும்பு, கம்பகா, களுத்துறை, பொலனறுவை, மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை, குறித்த 29 பேரும் இராணுவத்தின் பாதுகாப்புடன் பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டு அவர்களது சொந்த இடங்களுக்கு கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர்.