மகள்களை வைத்து 100க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஏமாற்றிய தாய் : கோடிகளில் புரண்டது அம்பலம்!!

 

இளைஞர்களை ஏமாற்றிய தாய்

சென்னையில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த தாய், மகள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாளர் சேர்ப்பு அதிகரியாக வேலை செய்து வந்த அமுதா, வேலை வேண்டி இணையதளத்தில் பதிவு செய்த இளைஞர்களின் தகவல்களை சேகரித்துள்ளார்.

அந்த இளைஞர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.50 ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட நங்கநல்லூரை சேர்ந்த முத்துராஜ் என்பவர் கடந்த மாதம் சென்னை காவல்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்தார்.

அதில், வளசரவாக்கத்தை சேர்ந்த அமுதா மற்றும் அவரது மகள் மோனிஷா ஆகியோர் தன்னுடைய மகனுக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் பெற்றுகொண்டு தலைமறைவாகிவிட்டதாகவும், பணத்தை மீட்டு தருமாறும் குறிப்பிட்டிருந்தார்.

இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், பெங்களூரில் சொகுசு வாழ்க்கையில் இருந்த அமுதா அவருடைய மகள்கள் மோனிஷா, பூஜா மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் லட்சுமி, பூஜா ஆகியோர் உடந்தையாக இருந்த காரணத்தினாலும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, வேலை வாங்கி தருவதாக கூறி 170 பேரிடம் சுமார் 1.50 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார் புழல் சிறையில் அடைத்தனர்.

வெளிநாட்டிலிருந்து மனைவியை காண ஊருக்கு வந்த கணவன் : நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

 

அதிர்ச்சி சம்பவம்

வெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஊருக்கு வந்த கணவன், சந்தேகபுத்தியால் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் கடப்பாவை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு (32). இவர் மனைவி கங்கா தேவி (29). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆஞ்சநேயலு கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சொந்த ஊருக்கு வருவார்.

அப்படி இரு மாதங்களுக்கு முன்னர் மனைவி மற்றும் குழந்தைகளை காண ஊருக்கு வந்தார். அப்போது மனைவி கங்காதேவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அடிக்கடி இருவரும் சண்டை போட்ட நிலையில் இரு தினங்களுக்கு சண்டை முற்றியது.

அப்போது ஆத்திரமடைந்த ஆஞ்சநேயலு தன்னிடம் இருந்த சுத்தியலால் கங்காதேவியின் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்தார். இதை கங்காதேவியின் தாய் மல்லம்மா (48) தடுக்க முயன்ற நிலையில் அவரையும் அடித்துள்ளார்.

இதில் காயமடைந்த மல்லமாவை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் கங்காதேவியின் சடலத்தை கைப்பற்றிவிட்டு ஆஞ்சநேயலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணவனின் ஆசையால் ஏற்பட்ட கோபம்…. மகனின் கழுத்தை அறுத்து கொன்ற தாயின் விபரீத முடிவு!!

 

தாயின் விபரீத முடிவு

திருச்சி மாவட்டத்தில் கணவர் மீது ஏற்பட்ட கோபத்தால் மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முருகன் (வயது48). இவர் துவாக்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கோமதி (40) என்கிற மனைவியும் 11-வது வகுப்பு படிக்கும் நந்தினி என்கிற மகளும், 9-வது வகுப்பு படிக்கும் சரவணன் (15) என்கிற மகனும் உள்ளனர். முருகனுக்கு தனது சொந்த ஊர் புதுப்பட்டியில் நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது ஆசை. ஆனால், இது கோமதிக்கு பிடிக்கவில்லை.

கோமதிக்கு துவாக்குடி பக்கம் உள்ள தனது சொந்த ஊரான மாங்காவனம் பகுதியிலோ அல்லது திருச்சி நகருக்குள்தான் வீடு கட்ட வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. அதை கணவர் முருகனிடம் கூறினார். ஆனால் இதில் முருகனுக்கு விருப்பமில்லை. மேலும் வடக்கு புதுப்பட்டியில் தான் வீடு கட்டுவது என அவர் முடிவெடுத்துள்ளார்.

கடந்த 3 மாத காலமாக இந்த இடம் வாங்கியது குறித்து கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடக்கு புதுப்பட்டியில் உள்ள இடத்தில், முருகன் பூமி பூஜை நடத்தியதோடு வீடு கட்டுவதற்கான வேலைகளையும் தொடங்கினார்.

இதனால், கோபத்தின் உச்சிக்கே சென்ற கோமதி கணவரிடம் மீண்டும் தகராறு தகராறு செய்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, மகன் நந்தினி தனி அறையில் படுத்திருந்துள்ளார். கோமதியும் அவரது மகனும் வேறு ஒரு அறையில் படுத்திருந்துள்ளனர்.

காலை நந்தினி எழுந்து பார்த்தபோது தாய் கோமதியும், தம்பி சரவணனும் படுத்திருக்கும் அறை திறக்காததை கண்டார். பின்னர் அறைக்கதவை தட்டி உள்ளார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதனால் பதற்றமான நந்தினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜன்னலை திறந்து பார்த்தார். அங்கு, தாயார் கோமதி தூக்கில் அசைவற்று தொங்கி கொண்டிருந்தார்.

விசாரணையில் மகனை கழுத்தை அறுத்து கொன்று விட்டு கோமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. வீடு கட்டும் பிரச்சினையில் தன் மகனை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்று விட்டு கோமதியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் இருவரது உடல்களையும் பொலிசார் மீட்டு, பிரேத பரி சோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன் மீது அதிக காதல் வைத்த மனைவி : குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை!!

 

தற்கொலை

புனேவில் கணவரின் மீது அதிக காதல் வைத்திருந்த மனைவி, மாமியாரின் கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புனே மாநிலம் ஹதாஸ்பார் பகுதியை சேர்ந்தவர் ஜான்வி (22). இவருடைய கணவர் அமித் அப்பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

தம்பதியினருக்கு 2 வயதில் சிவன் என்ற மகன் இருந்தான். 4 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்ததிலிருந்தே அமித்தின் தாய் சுஜாதா, மருமகள் ஜான்வியை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த காணப்பட்ட ஜான்வி, தன்னுடைய மகனை கொலை செய்துவிட்டு, தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சுஜாதாவின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், வீட்டில் ஆய்வு நடத்திய போது தன்னுடைய கணவருக்கு ஜான்வி எழுதியிருந்த ஒரு குறிப்பு சிக்கியது.

அதில், “அமித் நீ என்னை அதிகம் காதலிக்கிறாய் என்பது தெரியும். ஆனால் எனக்கான போதிய நேரம் ஒதுக்கவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.

கண்ணாமூச்சி விளையாடிய மகன் மரணம் : அதிர்ச்சியில் தந்தை எடுத்த விபரீத முடிவு!!

 

அதிர்ச்சியில் தந்தை

தமிழகத்தில் கண்ணாம்மூச்சி விளையாடிய மகன் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்ததால் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். கோவை அருகே கணுவாயின் சிவிசி சாய் அவென்யூவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 35), இவரது மனைவி பூவிதா, இவர்களுக்கு தேவதர்சினி(4), அஸ்வின்(2) என பிள்ளைகள் இருக்கின்றனர்.

நேற்றிரவு தனது பிள்ளைகளுடன் மணிகண்டன் கண்ணாமூச்சி விளையாடியுள்ளார், அப்போது தேவதர்சினி வீட்டின் மொட்டை மாடியிலும், அஸ்வின் காரின் அருகேயும் ஒளிந்து கொண்டனர். இதில் எதிர்பாராதவிதமாக அஸ்வின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்ததில் பலியானான், இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் தன் மகனின் சாவுக்கு தானே காரணமாகிவிட்டோமே என மனக்கவலையில் இருந்துள்ளார்.

தொடர்ந்து வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், தந்தையை தேடி வந்த தேவதர்சினி பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதுள்ளார்.

இவரது சத்தம் கேட்டு ஓடிவந்த பூவிதா அதிர்ச்சியில் கதற, அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர், அஸ்வினை தேடிய போது அவன் தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. மகன் மற்றும் கணவனின் சடலத்தை பார்த்து பூவிதா கதறியது பார்ப்போரின் கண்களை குளமாக்கியது.

வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் வீழ்ந்த வாகனம்!!

 

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் பால் பவுஸரொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

வெயாங்கொடையிலிருந்து, நோர்வூட் பால் சேகரிப்பு நிலையத்திற்கு சென்ற பவுஸரே இன்று காலை 6 மணியளவில் வீதியை வீட்டு விலகி குடைசாய்ந்துள்ளது.

எனினும் பால் பவுஸரின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தினால் யாருக்கும் பாதிப்புகள் இல்லை என்றும், விபத்து தொடர்பில் மேலதிக விசாணைகள் தொடர்வதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாசகர்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் பலி!!

இரத்தினபுரி குருவிட்ட நகரில் யாசகர் ஒருவரை மற்றுமொரு யாசகர் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த யாசகர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 50 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குருவிட்ட நகரில் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு நித்திரை கொள்ள சென்ற போது, இரண்டு பேருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியதில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான நபர், பேருந்து நிலையத்தில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றுள்ளதுடன் கீழே விழுந்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுக்கை விரிப்பாக பயன்படுத்தப்படும் அட்டை துண்டுகள் காரணமாக இந்த சண்டை ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலை செய்த யாசகரை பொலிஸார் நேற்றிரவே கைதுசெய்துள்ளனர்.

இரணைமடுகுள பகுதியில் தொடர்ந்தும் நீடிக்கும் ஆபத்து நிலை!!

இரணைமடுகுளத்தின் நீர்மட்டம் இன்று காலை 6 மணியளவில் 37 அடி 5 அங்குலத்தில் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இரணைமடுகுள பகுதியில் தொடர்ந்தும் ஆபத்தான நிலைமையே காணப்படுவதால் பார்வையாளர்களுக்கான அனுமதி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை 36 அடி நீர் கொள்ளளவு கொண்ட இரணைமடு குளமானது நேற்றையதினம் நாற்பது அடியாக உயர்ந்திருந்தது.

அத்துடன் குளத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை சுனாமி தாக்குமா? திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!

இலங்கையை சுனாமி தாக்கும் அச்சுறுத்தல் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலையில் இந்தோனேஷியாவில் பாரிய சுனாமி தாக்கம் ஏற்பட்டதுடன், 40 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600 பேர் வரை காயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையையும் சுனாமி பேரலைகள் தாக்கும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் அடைந்திருந்தனர்.

எனினும் இலங்கைக்கு அவ்வாறான பாதிப்பு எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. இது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மத்திய நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடபகுதியில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு காரணமாக சுனாமி அச்சம் தீவிரம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சர்வாதிகாரிகளை நிராகரிக்கக் கோரி ஊர்வலம்!!

ஜனநாயத்திற்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (23.12) வவுனியாவில் சர்வாதிகாரிகளை நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று இடம்பெற்றது.

இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வருகைதந்திருந்த சுமார் 250 இளைஞர்கள் ஒன்றுதிரண்டு வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக இருந்து ஊர்வலமாக இலுப்பையடியை சென்றடைந்து அங்கிருந்து வைத்தியசாலை சுற்றுவட்டத்தின் ஊடாக குள வீதியையடைந்து மீண்டும் பாடசாலை முன்றலை வந்தடைந்திருந்தனர்.

இதன்போது இலங்கையில் சர்வாதிகாரத்தினை நிராகரிப்போம் என்று கொடிகளை தாங்கியவாறு சென்ற இளைஞர்கள் ஜனநாயகம் வேண்டும் சர்வாதிகாரம் வேண்டாம் என்ற கோசத்தினையும் எழுப்பியிருந்தனர்.

கிளிநொச்சியில் கடும் வெள்ளம் : உயிரிழப்பும் பதிவாகியது!!

கிளிநொச்சி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக மின்சாரம் தாக்கி நேற்று இரவு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெரியகுளம் கண்டாவளை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நல்லதம்பி திருச்செல்வம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த தொடர்மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குபட்ட பெரியகுளம் கிராமத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த ஒருவர் மின்கசிவில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார் என அப்பகுதியில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவை தாக்கிய சுனாமி : பலர் உயிரிழப்பு : இலங்கைக்கு ஆபத்தில்லை!!

இந்தோனேஷியாவில் Sunda Strait கடல் பகுதியில் நேற்று இரவு தாக்கிய சுனாமி காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்தம் காரணமாக 600 பேர் காயமடைந்ததுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அந்த பகுதியில் முதலில் நில அதிர்வு ஒன்று உணரப்பட்ட நிலையில் சுனாமி தாக்கியதாக அந்நாட்டு அனர்த்த முகாத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் வளிமண்டலவியல் மற்றும் காலநிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கமைய, சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கு நிலஅதிர்வு காரணமல்ல என கூறிப்பிடப்படுகின்றது. இதற்கு Anak Krakatoa எரிமலை நடவடிக்கைகளின் விளைவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த சுனாமி தாக்கத்தின் போது கடல் பகுதியில் நின்ற ஒருவர் அதனை காணொளியாக பதிவிட்டு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதன் போது கடல் அலை வேகமாக வருவதனை அவதானிக்க முடிந்துள்ளது.

இந்த காணொளி சுனாமி தாக்கத்தை நன்கு வெளிப்படுத்துவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமான முன்னெடுக்கப்படுவதோடு, காயமடைந்தவர்களை வைத்தியசாலை அனுமதிக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

நேற்று இரவு 9.30 மணியளவில் சுனாமி தாக்கியுள்ளதாகவும், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டது. இந்த அனர்த்தம் காரணமாக பெருமளவு மக்கள் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை வட மாகாணத்தில் நேற்று பெய்த அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள குளங்கள் உடைப்பு எடுத்துள்ளன.

இந்நிலையில் இந்தோனேஷியாவில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளமை காரணமாக தாயக மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட இந்தோனேஷியாவின் சுமத்திரா பகுதியில் ஏற்பட்ட பாரிய சுனாமி அனர்த்தம் காரணமாக இலங்கை உட்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இலங்கையில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும் கடும் மழையால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 2,500 பேர் பாதிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 688 குடும்பங்களை சேர்ந்த 2,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்கள் மற்றும் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான நிவாரணப்பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழர் தாயகமான வடக்கின் பல பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பெய்த கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை வரை பெய்த அடைமழை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மிகப் பெரிய குளமான – முத்தையன்கட்டு குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில் வான்கதவுகள் அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளன.

இதனால் குளத்தை அண்டியுள்ள தாழ்நில பிரதேசங்கள் அனைத்திலும் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ள நிலையில், மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகள் மற்றும் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட மன்னாகண்டல் வசந்தபுரம் கிராமம் நீரில் மூழ்கியுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் முப்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த மக்களை மன்னாககண்டல் பாடசாலையில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலக அதிகாரிகள் கிராம அலுவலர் உள்ளிட்டவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட தேராங்கண்டல் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட ரெட்பானா, மாணிக்கபுரம், வள்ளிபுனம், மந்துவில், ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கனகரத்தினபுரம், பண்டாரவன்னி, பனிக்கன்குளம், உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் 599 குடும்பங்களை சேர்ந்த 1908 பேர் 16 இடைத்தங்கல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாந்தை கிழக்கு அம்பாள்புரம் கொல்லவிழாங்குளம் பகுதியிலும் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதோடு வவுனிக்குளத்தில் திடீரென நீர் வரத்து அதிகரித்ததால் நன்னீர் மீன்பிடி உபகரணங்களும் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலைப்பாணி கிராமத்துக்கான போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டுள்ளது. முல்லைத்தீவின் பிரதான வீதிகளில் குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதால் பலபகுதிகளுக்கான போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு வீதியின் மன்னாகண்டல் பகுதி மற்றும் பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியின் மூங்கிலாறு தீவிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீதியை குறுக்கறுத்து நீர் பாய்ந்து வருகின்றது.

தற்போது செய்கை செய்யப்பட்ட நெற்செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கால்நடைகள் பல வெள்ள நீரில் சிக்கி காணாமல் போயுள்ளதுடன், வீடுகள் வியாபார நிலையங்களுக்குள் வெள்ளம் சென்றமையால் பாரிய சொத்திழப்புக்களும் ஏற்ப்பட்டுள்ளன.

அனர்த்தத்தில் சிக்குண்டவர்களை மீட்க முப்படையினருடன் பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகள் களத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதோடு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்களில் அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டம் வெள்ளத்தில் முழ்கியது : தொடரும் அவலம்!!

கடந்த 24 மணித்தியாலத்தில் பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதுடன் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து உத்தியோகத்தர்களை மீட்டுள்ளனர்.

அதே வேளை தர்மபுரம் வைத்தியசாலைகுள்ளும் நீர்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் தரவுகளை சேகரிக்கும் பணிகளில் மட்டுமே இடுபடுவதனை அவதானிக்க முடிகின்றது எனவும் மீட்புப் பணிகளில் இராணுவம், பொலிஸார், கடற்படை மற்றும் இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது மீட்பு பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளதுடன் ஆபத்தில் உள்ளவர்கள் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவை தொடர்பு கொள்ள கூடியவாறு எவ்வித தொடர்பு இலக்கங்களும் இதுவரை வழங்கப்படவில்லை.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்கள் ஊடகவியாளர்கள் தரவுகளை வழங்குவதற்கு அதாவது பெரும் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களை அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு வழங்க முயற்சித்தாலும் அவர்களை உரிய நேரங்களுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குறிப்பாக இடைத்தங்கல் முகாம்களில் இருப்பவர்களுக்காக அத்தியாவசிய பொருட்டாகக் கூட உணவுகள் கூட இதுவரை வழங்கப்படவில்லை என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனைப் பகுதியில் பலரது வீடுகளுக்குள் வெள்ளம் சென்றமையால் 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்து பொது மண்டபம் ஒன்றில் உள்ளனர்.

அவர்கள் தொடர்பான தகவல் அதிகாரிகள் பலருக்கு வழங்கப்பட்டும் காலையில் இருந்து இதுவரை அவர்களுக்கான உணவு கூட வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா சின்னப்புதுக்குளம் இயேசுவின் அற்புத சபையினரால் சிரமதானம்!!

 

வவுனியா சின்னப்புதுக்குளம் இயேசுவின் அற்புத சபையினரால் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வருடாந்தம் சிரமதான நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

அதன் அடிப்படையில் இவ் வருடத்திற்கான சிரமதான நிகழ்வு இன்று (22.12.2018) நடைபெற்றதுடன் பெருமளவிலானோர் சிரமதானத்தில் கலந்துகொண்டனர்.

இயேசுவின் அற்புத சபையினரால் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பான அலங்காரம் மற்றும் ஆராதனை நிகழ்வுகளும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.

கிறிஸ்மஸ் தினத்தில் சிறப்பு ஆராதனையில் அனைவரையும் கலந்துகொண்டு இறையாசிகளை பெற்றுக்கொள்ளுமாறு இயேசுவின் அற்புத சபையினர் அழைக்கின்றனர்.

நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பரிதாபமாக பலி!!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குருஒயா மாப்பாகந்த பகுதியில் உள்ள ஆற்றில் இன்று நீராட சென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் விஜிராபுர பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரும் உறவினர்களின் வீட்டுக்கு சென்றிருந்த வேளை குறித்த மாப்பாகந்த ஆற்றில் நீராட சென்றபோதே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 13 வயதுடைய அப்துல் ரஹ்மான் மற்றும் 42 வயதுடைய மொகமட் முஸ்தாக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பலியான இருவரின் சடலம் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு, நீதவான் முன்னிலையில் மரண விசாரணைகள் இடம்பெற்றவுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபடவுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.