தம்பியை பராமரித்ததால் புலமைப் பரீட்சையை தவற விட்ட மாணவி, பரீட்சைக்கு போகாமல் ஒளிந்திருந்த 7 மாணவர்கள்!!

exam

தனது தம்பிக்காக ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை அவரது அக்கா தவறவிட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்தமுறை நடைபெற்று முடிவடைந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு தோற்றாமல் வீடுகளில் மறைந்திருந்ததாகக் கூறப்படும் 7 மாணவர்களை பொலிஸார் அழைத்துச் சென்று பரீட்சை நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவிலேயே இந்தச் சம்பவங்கள் பரீட்சை தினமான நேற்று இடம்பெற்றுளளது என்று கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது மாணவர்கள் சிலர் பரீட்சை நிலையத்திற்கு சமூகமளிக்காத நிலைமை காணப்பட்டது.

இது தொடர்பில் பரீட்சை நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் பாதுகாப்புக் கடமைக்கு வந்த பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதனைத் தொடர்ந்து கல்குடா பொலிஸார் இப்பகுதி சிவில் பாதுகாப்புக் குழுக்களின் உதவியுடன் இந்த மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை பரீட்சை நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது இவ்வாறிருக்க, ஒரு வீட்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவி ஒருவர் தனது தாய் வீட்டில் இல்லாததன் காரணமாக தானே தனது இளைய தம்பியை பாராமரித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், பொலிஸார் இந்தச் சிறுமியை மாத்திரம் விட்டுவிட்டு ஏனைய 7 மாணவர்களையும் பரீட்சை நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

10 இலட்சம் கரப்பான் பூச்சிகள் கூண்டுகளில் இருந்து எஸ்க்கேப் : நடுக்கத்தில் நகரமக்கள்!!

kara

சீனாவின் ஜியாங் ஷு மாகாணத்தில் பூச்சிகள் பண்ணை உள்ளது. இங்கு பாரம்பரிய மருந்துக்காக கரப்பான் உள்ளிட்ட பூச்சிகள் பராமரித்து வரப்படுகின்றன.

கடந்த 22ம் திகதி அங்கு பராமரித்து பாதுகாக்கப்பட்ட கரப்பான் பூச்சிகளை கூண்டுகளில் இருந்து யாரோ மர்மநபர் திறந்துவிட்டார். அங்கிருந்து 10 லட்சம் கரப்பான் பூச்சிகள் பறந்து தப்பி ஓடிவிட்டன.

அவை பூச்சி பண்ணை உள்ள டபெங் பகுதிகளில் பறந்தபடி சுற்றி திரிகின்றன. அவை பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்திலும், பீதியிலும் உள்ளனர்.

இந்த கரப்பான் பூச்சிகள் மிக விரைவில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. எனவே, அவற்றின் முட்டைகளையும், குஞ்சுகளையும் அழிக்கும் நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளிச் சிறுமிகளை அடைத்து வைத்து சீரழித்த கடாபி : பரபரப்புத் தகவல்கள்!!

kadabi

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி மும்மத் அல் கடாபி பள்ளிச் சிறுமிகளை எப்படியெல்லாம் தனது காமப் பசிக்கு இரையாக்கினார் என்பது குறித்த புதிய புத்தகம் ஒன்றில் பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

அந்த சிறுமிகளை அவர் செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார் என்றும், தனது கோட்டைக்குக் கீழே அறை அமைத்து அவர்களை அடைத்து வைத்து பாலியல் ரீதியாக அவர்களை தனது இச்சைக்குப் பயன்படுத்தி வந்ததாகவும் Gaddafi´s Harem: The Story Of A Young Woman And The Abuses Of Power In Libya என்ற தலைப்பிலான அந்த நூல் கூறுகிறது.

பிரான்ஸைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்னிக் கோஜீன் இதை எழுதியுள்ளார். இந்த நூல் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த நூலில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள்…

தனது கண்ணில் எந்த அழகான சிறுமி பட்டாலும் உடனே அவர்களைக் கடத்தி வருமாறு தனது பாதுகாவலர்களுக்கு உத்தரவிடுவாராம் கடாபி.
பின்னர் அந்த சிறுமிகள தனது கோட்டை போன்ற மாளிகையின் கீழே அமைக்கப்பட்டிருந்த ரகசிய அறைக்குக் கொண்டு போய் அடைக்க உத்தரவிடுவாராம்.

அங்கு வைத்துத்தான் பாலியல் ரீதியான சேஷ்டைகளை அவர் அரங்கேற்றுவாராம். இப்படி கடத்தி வரப்பட்டு சித்திரவதைக்குள்ளான ஒரு சிறுமிதான் சொரயா. இவருக்கு அப்போது 15 வயதாகும். ஐந்து வருடங்கள் இவர் சீரழிந்துள்ளார்.

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் ஒக்டோபரில் வெளிவரும் : பரீட்சை ஆணையாளர்!!

grade 5

நடைபெற்று முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையின் முடிவுகளை எதிர்வரும் ஒக்டோபர் முதல்வாரத்தில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை நேற்று நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எதுவிதமான முறைப்பாடுகளும் தமக்குக் கிடைக்கவில்லையென சுட்டிக்காட்டியுள்ள பரீட்சைகள் ஆணையாளர் குறித்த பரீட்சையானது வெற்றிகரமாக நிறைவடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு நேற்றைய தினம், நாடளாவிய ரீதியில் மூன்று இலட்சத்து 29 ஆயிரத்து 725 மாணவர்கள் தோற்றியிருந்ததுடன், அவர்களுக்கான பரீட்சை 2836 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நைஜீரியாவில் 44 கிராமத்தினரை கழுத்தை அறுத்துக் கொன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள்!!

cut

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள கிரமாத்திற்குள் புகுந்த இஸ்லாமிய தீவரிவாதிகள் அங்குள்ள 44 பேரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர்.

நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டத்திட்டங்கள் படி ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்று கூறி போகோஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்கள் அவ்வப்போது கிராமங்களில் புகுந்து மக்களை தாக்கி வருகின்றனர். அவர்கள் நேற்று அதிகாலையில் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள தும்பா என்ற கிரமாத்திற்குள் புகுந்தனர்.

துப்பாக்கியால் சுட்டால் அங்குள்ள பாதுகாப்பு படையினருக்கு கேட்டுவிடும் என்பதால் அவர்கள் 44 கிராமத்தினரை கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர்.

இந்த தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களின் கண்களை அவர்கள் தோண்டி எடுத்துள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 2010ம் ஆண்டில் இருந்து இதுவரை 1700க்கும் மேற்பட்ட மக்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

4வதும் பெண் குழந்தை என்ற விரக்தியில் 3 மகள்களுடன் தனக்கும் தீ வைத்த பெண்!!

fire-06

இந்திய குஜராத்தில் ஆண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத விரக்தியில் பெண் ஒருவர் தனது 3 மகள்களுக்கு தீ வைத்துவிட்டு தானும் தீ வைத்துக் கொண்டார்.

குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டம் கொடினார் தாலுகாவில் உள்ளது சாரா கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வாஜு ரபாரி. அவரது மனைவி புனிபென் ரபாரி(40). அவர்களுக்கு முதன் முதலாக பிறந்த ஆண் குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டது.

இதையடுத்து அவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் பிறந்தன. அண்மையில் தான் நான்காவது குழந்தை பிறந்தது. பிறந்ததெல்லாம் பெண்ணாக இருந்ததால் புனிபென் வருத்தத்தில் இருந்தார்.

இந்நிலையில் வாஜு ஒரு மகளை அழைத்துக் கொண்டு ஆடு மேய்க்க சென்றுவிட்டார். அப்போது புனிபென் தனது 4 மாத குழந்தை கத்வி உள்ளிட்ட 3 மகள்கள் மீது தீ வைத்தார். பிறகு தனக்கும் தீ வைத்துக் கொண்டார்.

இதில் ஒரு மகள் தப்பியோடிவிட்டார். மீதமுள்ள காஜல்(6) மற்றும் 4 மாத குழந்தை ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். புனிபென் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜுனாகத் நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் புனிபென் மீது கொலை மற்றும் தற்கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

மாட்டின் உயிரைக் காப்பாற்றப்போய் குட்டையில் மூழ்கிய 3 பள்ளி மாணவிகள் பரிதாப மரணம்!!

kuttai

காஞ்சிபுரம் அருகே மாட்டின் உயிரைக் காப்பாற்றுவதற்காக குட்டையில் இறங்கிய 3 மாணவிகள் நீரில் மூழ்கி பரிதாபமாகப் பலியானார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தனலட்சுமி (14), ஷாலினி ( 14) மற்றும் அஜிதா (12).

இதில் முறையே தனலட்சுமியும், ஷாலினியும் 9ம் வகுப்பும், அஜிதா 7ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று விடுமுறை தினமாததால் மூவரும் அருகில் உள்ள பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மேய்த்து வந்த மாடு ஒன்று அருகிலிருந்த குட்டைக்குள் இறங்குவதைக் கண்டுள்ளனர்.

உடனடியாக மாடு நீரில் மூழ்கி விடாமல் வெளியே விரட்டுவதற்காக ஒருவர் பின் ஒருவராக குட்டையில் இறங்கியுள்ளனர். மூவருக்குமே நீச்சல் தெரியாத காரணாத்தால் பரிதாபமாக மூவரும் நீரில் மூழ்கிப் பலியானார்கள்.

சிறுமிகள் மூவரும் நீரில் தத்தளிப்பதைக் கண்ட அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மற்றொரு சிறுவன் ஊருக்குள் சென்று தகவல் கூறியுள்ளான். ஆனால், ஊர்மக்கள் வருவதற்குள் சிறுமிகள் உயிரிழந்ததால் அவர்களால் சிறுமிகளின் உயிரற்ற சடலத்தை மட்டுமே மீட்க முடிந்தது.

தற்போது அச்சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரே ஊரைச் சேர்ந்த 3 சிறுமிகள் குட்டையில் மூழ்கி பலியான சம்பவத்தால் ஆண்டி சிறுவள்ளூர் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பெண்ணின் கண்ணை மட்டும் பார்த்து விசாரணை நடத்த முடியாது : பிரிட்டன் நீதிபதி கண்டிப்பு!!

face

கண்ணை மட்டும் பார்த்து விசாரணை நடத்த முடியாது, குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை அடையாளம் காண்பதற்கு, அவர் அணிந்திருக்கும் முகத்திரை கட்டாயம் அகற்றப்பட வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். பிரிட்டனில் குற்ற வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 21 வயது முஸ்லிம் பெண்ணை பொலிசார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தினர்.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பெண் அவர் சார்ந்த மத வழக்கப்படி, பர்தா அணிந்திருந்தார். விசாரணையின் போதும், பர்தாவுடன் ஆஜரானார். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி பீட்டர் மர்பி “”சம்பந்தப்பட்ட பெண்ணை அடையாளம் காண, அவரது முகத்தை பார்க்க வேண்டியுள்ளது எனவே அவர் முகத்தை மூடியுள்ள துணியை விலக்க வேண்டும்” என்றார்.

எனினும் இளம் பெண் அவரின் மத வழக்கப்படி ஆண்கள் முன்னிலையில் முகத்திரையை அகற்ற முடியாது என பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.

இதை கேட்ட நீதிபதி நீதிமன்றம் அனைவருக்கும் பொதுவானது. கோர்ட்டுக்கு வெளியே அவரவரது மத வழக்கங்களை பின்பற்ற அனைவருக்கும் அனுமதி உண்டு. விசாரணையின் போது அவர் கண்டிப்பாக முகத்திரையை அகற்ற வேண்டும்.

கண்களை மட்டும் பார்த்து, குற்றவாளியை அடையாளம் காண முடியாது என்றார். எனினும், முகத்திரையை அகற்ற அப்பெண் சம்மதம் தெரிவிக்காததால், வழக்கு விசாரணை, அடுத்த மாதம் 12ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆண் குழந்தை பெற 20 வயது பெண்ணை விலைக்கு வாங்கி மணந்த 55 வயது நபர்!!

forced-marriage_1748513c

பாகிஸ்தானில் ஷாகிலால் மாவட்டத்தில் உள்ள சீசா வாடன் என்ற இடத்தை சேர்ந்தவர் முகமது அலி (55). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.இவருக்கு ஆண் குழந்தை இல்லை. எனவே வேறு ஒரு இளம்பெண்ணை மணந்து அவர் மூலம் ஆண் குழந்தை பெற முடிவு செய்தார்.

எனவே லாகூர் அருகேயுள்ள மமூ கஞ்சன் என்ற கிராமத்தை சேர்ந்த பேகம் பீபி என்ற 20 வயது பெண்ணை 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கினார். பின்னர் அப்பெண்ணை திருமணம் செய்து சீசாவாடனில் தனியாக குடிவைத்தார்.

இவர்களது திருமணம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நடந்தது. அதை தொடர்ந்து அவர் அப்பெண்ணுக்கு கடுமையான செக்ஸ் தொந்தரவு கொடுத்து வந்தார். மேலும், அவரை அடித்து கொடுமைப்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் அவசர பொலிஸ் உதவியை நாடினார். உடனே பொலிசார் விரைந்து வந்து இளம் பெண்ணை திருமணம் செய்த முகமது அலியை கைது செய்தனர்.

அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் எனது 2வது மனைவியை நான் மிகவும் நேசிக்கிறேன். எனக்கு அவர் ஒரு ஆண் குழந்தையை பெற்று தந்தவுடன் அவரை விட்டு விடுவதாக கூறி இருக்கிறேன்.அதன்படி அவர் ஒரு ஆண் குழந்தையை பெற்றவுடன் அவரை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன் என்றார். அதை ஏற்காத பொலிசார் பேகம் பீபியை மீட்டனர்.

அலையில் அடித்துச் செல்லப்பட்டு 3 வயது குழந்தை பரிதாப மரணம்..!!

sea

மூன்று வயது குழந்தை ஒன்று கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் இன்று காலை மாரவில, குருசபல்லிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தினர் வீட்டில் இருந்த வேளையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குழந்தை வீட்டின் பின்புறமாக கடலிற்குச் சென்றுள்ளது. இதன்போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் மாரவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் விரும்பி செக்ஸ் உறவு கொள்வது குற்றமல்ல: டெல்லியில் தீர்ப்பு!!

Delhi-High-Court-1

18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் அவரது சம்மதத்துடன் ஒரு ஆண் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம் இல்லை என்று டெல்லி நீதிமன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

டெல்லியில் 15 வயது பெண் ஒரு பெண்ணை கடத்தி பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக 22 வயது வாலிபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

இந்த வழக்கை டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிபதி தர்மேஷ் சர்மா விசாரித்து வந்தார்.விசாரணை முடிவில் குற்றம் சாட்டப்பட்ட வாலிபரை விடுதலை செய்து அவர் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு விவரம் வருமாறு:

இந்த வழக்கில் டெல்லி பொலிசாரும் டெல்லி மகளிர் ஆணையமும், சமீபத்தில் இயற்றப்பட்ட போக்சோ சட்டப்படி (குழந்தைகள் பாலியல் குற்ற தடுப்பு சட்டத்தின்படி) 13 வயது முதல் 18 வயது வரையிலான பருவ வயதினர் எந்த விதமான செக்ஸ் உறவும் வைத்துக்கொள்ள ஒட்டுமொத்த தடை வேண்டும் என்றார்கள்.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டால் 18 வயதுக்கு உட்பட்ட எந்த ஒரு தனி நபரின் உடலும் அரசின் சொத்தாகி விடும் 18 வயதுக்குட்பட்ட தனி நபர் மற்றொருவருடன் உடல் இன்பம் அனுபவிக்க முடியாமல் போய் விடும் என அஞ்சுகிறேன்.

அதே நேரத்தில் மிக இளம் வயதில் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டாலோ அல்லது பாதுகாப்பற்ற செக்ஸ் உறவில் ஈடுபட்டாலோ அதனால் ஏற்படுகிற தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூகக்கடமை நம் அனைவருக்கும், அரசாங்கத்துக்கும், பொலிசுக்கும் இருக்கிறது.

போக்சோ சட்டத்தைப் பொறுத்தமட்டில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களையும், பெண்களையும் குழந்தைகளாகவே கருதுகிறது. இந்தச்சட்டத்தின் பிரிவுப்படி 18 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் சம்மத பாலுறவு வைத்துக்கொள்வது குற்றம் ஆகாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணும், பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆணும் திருமணம் செய்து கொண்டு விட்டனர்.

 

ஒரு பாட்டுக்காக 2.5 லட்சத்துக்கு பூ வாங்கிய தயாரிப்பாளர்..!!

poo

கழுகு படத்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா தற்போது நடித்து வரும் படம் வானவராயன் வல்லவராயன் இப்படத்தில் மா.கா.பா.ஆனந்த் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார். மோனல் கஜ்ஜார் ஜோடியாக நடிக்கிறார். ராஜமோகன் இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் திருமண பாடல் ஒன்று அமைந்துள்ளது. இது சென்னையில் உள்ள ஒரு பெரிய திருமண மண்டபத்தில் படமாக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்கள் இப்பாடலை எடுத்துள்ளனர். திருமண மண்டபத்தை அலங்காரம் செய்வதற்காக ஒருநாளைக்கு பூ மட்டும் 50 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளனர். மொத்தம் 5 நாட்களுக்கு இரண்டரை லட்சத்துக்கும் மேல் பூவுக்கு மட்டுமே செலவு செய்திருக்கிறார்கள். மேலும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் நடிக்க சம்பளம், பேட்டா என தனியாக 25 லட்சம் செலவழித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் ராஜமோகன் கூறும்போது, இப்பவும் கிராமத்து திருமணங்களில் வாராயோ தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ என்ற பாசமலர் படத்தில் இடம்பெற்ற பாடல்தான் ஒலித்துக் கொணடிருக்கிறது. வானவராயன் வல்லவராயன் படம் வெளிவந்த பிறகு இந்த படத்துல வர்ற “வாங்கம்மா வாங்கப்பா வாங்கண்ணே வாங்கத்தே” என்று உறவுகளை கூறி அழைக்கும் இந்த பாட்டுதான் ஒலிக்கும். சினேகன் எழுதியுள்ள இந்த பாட்டு நிச்சயம் பட்டையை கிளப்பும் என்று கூறினார்.

இசையமைப்பாளரான பாடகர் ஸ்ரீநிவாஸ்..!!

srinivas

மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற மானா மதுர மாமரத்து கிளையே, தாஜ்மகால் படத்தில் இடம்பெற்ற சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால், படையப்பா படத்தில் இடம்பெற்ற மின்சாரப் பூவே போன்ற எண்ணற்ற ஹிட் பாடல்களை பாடியவர் ஸ்ரீநி என்று அழைக்கப்படும் ஸ்ரீநிவாஸ்.

இவர் தற்போது இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். மிருகம், உயிர், சிந்து சமவெளி போன்ற படங்களை இயக்கி பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் சாமி, தற்போது எந்தவித பரபரப்பும் இல்லாமல் அதாவது எந்தவித சர்ச்சையும் இல்லாமல் கங்காரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்குத்தான் ஸ்ரீநிவாஸ் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் முழுவதையும் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. முழுக்க முழுக்க கொடைக்கானல் மலையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அமைதிப்படை – 2′ படத்தை தயாரித்த வி – ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இதில் புதுமுக நாயகனாக அர்ஜுனா நடிக்கிறார். வர்ஷா அஸ்வதி நடிக்கிறார். தங்கை கேரெக்டரில் பிரியங்கா, இவர்களுடன் தம்பி ராமையா, கலாபவன் மணி, ஆர்.சுந்தரராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல் வெளியீட்டை அக்டோபர் 14ம் திகதி மிகப்பிரம்மாண்டான விழாவாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அர்ஜுனின் இரண்டாவது மகளையும் அறிமுகப்படுத்தும் விஷால்..!!

vishal

அக்சன் கிங் அர்ஜூனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளன. வெளிநாட்டில் படிப்பை முடித்த ஐஸ்வர்யா, விஷாலுடன் இணைந்து பட்டத்து யானை என்ற படத்தில் நடித்தார். படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதால் அர்ஜூன் மற்றும் ஐஸ்வர்யா மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் தங்கை அஞ்சனாவுக்கும் படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளதாம். சினிமாவில் அவ்வளவாக ஆர்வமில்லாத அஞ்சனா அக்காவுடன் ஷுட்டிங் சென்று வந்ததில் நடிக்க ஆசை வந்துவிட்டதாம். தன்னுடைய விருப்பத்தை அப்பாவிடம்கூற அவரும் சம்மதித்துவிட்டாராம்.

இந்த விஷயம் விஷால் காதுகளுக்கு தெரியவர ஐஸ்வர்யாவைப் போன்று அஞ்சனாவையும் நான்தான் அறிமுகப்படுத்துவேன் என அர்ஜுனிடம் விஷால் கூறினாராம். அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

இளையராஜா இசையில் சினேகன் நடிக்கும் இராஜராஜ சோழனின் போர்வாள்!!

snehan

பாடலாசியரியராக இருந்து வந்த சினேகன், யோகி படத்தில் அமீருடன் இணைந்து ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதையடுத்து பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரேம்நாத் இயக்கிய உயர்திரு 420 என்ற படத்தில் நடித்தார். இப்படம் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை.

இந்நிலையில், மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு சினேகனுக்கு கிட்டியுள்ளது. ஆர்.எஸ்.அமுதேஷ்வர் இயக்கும் இராஜராஜ சோழனின் போர்வாள் என்ற படத்தில் சினேகன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். உலக சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக மக்கள் முன்னிலையில் இளையராஜா மெட்டமைக்கிறாராம். உழவன் திரைக்களம் படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. விரைவில், படம் குறித்த விரிவான செய்திகள் வெளியிடப்படும் என தெரிகிறது.

ஜிகர்தண்டாவில் இயக்குனரானார் சித்தார்த்..!!

sidharth

தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்கு பிறகு சித்தார்த் நடித்து வரும் படம் ஜிகர்தண்டா. பீட்சா படத்தை சூடாக நமக்கு பரிமாறிய கார்த்திக் சுபாராஜ் கூலாக இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார்.

இப்படத்தில் சித்தார்த், சினிமா இயக்குனராக வருகிறாராம். தன்னுடைய முதல் படத்திற்காக மதுரைக்கு செல்லும் சித்தார்த்துக்கு அங்கு உள்ள லோக்கல் ரவுடிகளால் பிரச்சினை வருகிறது. அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதே படத்தின் கரு என கூறப்படுகிறது.

சித்தார்த் ஏற்கெனவே இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இதனால், இப்படத்தில் இயக்குனர் வேடத்தில் நடிப்பதில் அவருக்கு சிரமம் இல்லையாம்.

இந்த படத்தில் நேரம், சூதுகவ்வும் படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய சிம்ஹா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பரபரப்பாக உருவாகிவரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.