சினிமாவில் பப்ளிசிட்டி வேண்டும் என்பதற்காக தங்களை பற்றி தாங்களே கிசுகிசுக்களை பரவ விடுகின்றனர்.
ஆனால் ஒருசிலரை பற்றி தானாகவே கசிந்து விடும்.
மேலும் தொடர்ந்து ஒரே நடிகருடன் நடித்தால் சொல்லவே வேண்டாம், உடனே கொளுத்தி போட்டு விடுவார்கள்.
இதே போன்று தான் பிந்து மாதவி- விமல் பற்றி கிசுகிசுக்கள் பரவி வருகிறது.
இதுபற்றி பிந்து மாதவி கூறுகையில், இதற்கு முன்பு களவாணி, கலகலப்பு படங்களில் ஓவியாவுடன் நடித்து வந்ததால் அவரையும், விமலையும் இணைத்து செய்திகள் வந்தன.
தற்போது நான் இரண்டு படங்களில் நடித்து விட்டதால், என்னைப் பற்றியும் வருகிறது.
சினிமாவில் இதெல்லாம் சகஜமான ஒன்று தான், ஆனால் அதை எக்காரணத்தை கொண்டும் தொடரவிடக் கூடாது.
காரணம், மற்ற ஹீரோக்கள் இதை உண்மை என நம்பி நம்மை தவிர்க்க வாய்ப்பிருக்கிறது. அதனால் தற்போது இந்த கிசுகிசுவை ஊதி அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் விமலுடன் நட்பு ரீதியில் சினிமா விழாக்களுக்கு ஒன்றாக வருவதைக்கூட நிறுத்தி விட்ட பிந்து மாதவி, மற்ற ஹீரோக்களின் படங்களில் கவனம் செலுத்த போவதாக கூறுகிறாராம்.
இளைய தளபதி விஜய்- அமலாபால் இணைந்து நடித்துள்ள படம் தலைவா.
இயக்குனர் ஏ.எல். விஜய்யின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.
அப்போது பேசிய அமலா பால், தலைவா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது பெருமையாக உள்ளது.
ஒவ்வொரு நடிகைக்கும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது கனவு.
தலைவா படத்தின் மூலம் என்னுடைய கனவு நிறைவேறி உள்ளது.
விஜய் மிக இனிமையானவர், அன்பாக பேசி பழகுவார்.
திறமையானவர்களை கொண்டு உருவாகியுள்ள இப்படம், நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஏற்கனவே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தெய்வ திருமகள் படத்தில் நடித்தேன்.
இதில் நடித்ததும் நல்லதொரு அனுபவத்தை தந்தது என தெரிவித்துள்ளார்.
விழாவில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஏ.எல்.அழகப்பன், நடிகை சரண்யா, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மாயாஜாலக் காட்சிகள் போன்று ஓர்டர் செய்த உணவுகள் பறக்கும் தட்டாக ஆகாயத்தில் வந்து மேசையில் குதிக்கிறது.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹோட்டல் நிறுவனம் யோ சுஷி. தலைநகர் லண்டன் மட்டுமின்றி நாட்டின் பல இடங்களிலும் ரஷ்யா, ஐக்கிய அரபு குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் இதன் கிளைகள் உள்ளன.
இதன் லண்டன் கிளையில் தான் சமீபத்தில் டிரோன் சர்வீஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வாடிக்கையாளர் ஓர்டர் செய்த உணவை மினி டிரோன் ஒன்று சுமந்து கொண்டு சாப்பாட்டு மேசைக்கே பறந்து வருகிறது.
ஐபேட் கண்ட்ரோலில் இயக்கப்படும் இந்த டிரோன் சப்ளை வாடிக்கையாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.இதில் மினி ஹெலிகாப்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால், அது அழகாக இறக்கைகளை சுழற்றிய,படி , பறந்து செல்கிறது.
உணவுப் பதார்த்தங்களை வாடிக்கையாளர் எடுத்துக் கொண்ட பிறகு திரும்பி பறந்து சென்று விடும் வகையில் இது ட்யூன் செய்யப்பட்டுள்ளது.2 நவீன கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த டிரோனை, ஹோட்டல் ஊழியர் ஒருவர் ஐபாட் உதவி கொண்டு இயக்குகிறார்.
இந்த டிரோன் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறனுடையது.இது குறித்து யோ சுஷி ஓட்டல் அதிகாரிகள் கூறுகையில், உலகம் முழுவதும் எங்கள் ஹோட்டல்கள் 70 இடங்களில் உள்ளது.
கன்வேயர் பெல்ட் மூலம் சப்ளை செய்வது, ரோபோ மூலம் சப்ளை செய்வது ஆகிய முயற்சிகளை தொடர்ந்து, தற்போது மினி டிரோன் உதவியுடன் சப்ளையை தொடங்கியிருக்கிறோம்.
அசம்பாவிதங்கள் எதுவுமின்றிஇ இது சிறப்பாக நடந்தால் மற்ற கிளைகளிலும் இந்த பறக்கும் தட்டு முறை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.
தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக மனிதர்களின் வேலைகளை இலகு படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள உணவகமொன்றில் பறந்து பறந்து உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் உபகரணத்தை இதற்கு சிறந்த உதாரணமாக குறிப்பிடலாம்.
குறித்த உணவகம்.குறித்த உபகரணமானது மணிக்கு 25 மைல் வேகத்தில் பறந்துசெல்லக் கூடியது. இது பாரம் குறைந்த காபன் பைபர் பிரேம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் அதனை தனது 64 கிளைகளிலும் அறிமுகப்படுத்தவுள்ளது.குறித்த நிறுவனமானது இதற்கு முன்னரும் பல புரட்சிகர அறிமுகங்களை தனது உணவகங்களில் மேற்கொண்டுள்ளது.
உணவினை தானாக சென்று வழங்கக் கூடிய ‘கொன்வேயர் பெல்ட்’ மற்றும் பேசும் ரொபோ ட்ரோலிஸ் என என்பன அவையாகும்.இதனால் ஊழியர்களின் நேரம் மீதமாவதுடன், துரிதமாக உணவும் பரிமாறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
விஞ்ஞானம் போகின்ற போக்கை பார்த்தால் எதிர்காலத்தில் மனிதர்கள் செய்யும் சகல வேலைகளையும் இயந்திரங்கள் செய்யும்.மனிதர்களுக்கு இனி வேலையே இல்லாமல் போய்விடும் போலிருக்கிறது அல்லவா?
பூபதி பாண்டியன் இயக்கத்தில், விஷால்- ஐஸ்வர்யா அர்ஜூனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் பட்டத்து யானை.
இப் படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது.
விழாவில் பேசிய விஷால், மலைக்கோட்டை படத்தில் நடித்த போதே பட்டத்து யானை குறித்து நானும், பூபதி பாண்டியனும் யோசித்து வைத்திருந்தோம்.
ஆனால் அதற்கான நேரம் இப்போதுதான் அமைந்திருக்கிறது.
சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் இணைகிறோம். பட்டத்து யானை படம் முழுநீள நகைச்சுவை படமாக மட்டுமின்றி கமர்ஷியல் படமாகவும் இருக்கும்.
ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு இது முதல் படம், ஆனால் அவர் ஏற்கனவே பல படங்களில் நடித்ததை போன்றதொரு அனுபவம் இதில் தெரியுது.
ஒரு படத்தின் நாயகன், நாயகிக்கு மட்டும் கெமிஸ்ட்ரி நல்லா இருக்கணும்னு கிடையாது.
அந்தப் படத்தோட நாயகன், இயக்குனருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா இருந்தாலே படம் ஹிட்டாகும் என்று தெரிவித்தார்.
விழாவில் விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன், ஆர்யா, பூபதி பாண்டியன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், பட தயாரிப்பாளர் கேயார், இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மயில்சாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி அல்லது 28ஆம் திகதியில் நடத்துவதற்கு எண்ணியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிவி பிரகாஷ்குமார் – பின்னணி பாடகி சைந்தவி திருமணம் வரும் ஜூன் 27-ம் தேதி வியாழக்கிழமை சென்னையில் நடக்கிறது.
‘வெயில்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர், ஜி.வி.பிரகாஷ் குமார். இவர், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார். கிரீடம், மதராச பட்டினம், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, தெய்வத்திருமகள், தாண்டவம், பரதேசி, தலைவா ஆகிய படங்களுக்கும் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார். பாரதிராஜா, மகேந்திரன் போன்ற இயக்குநர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
இவருக்கும், சினிமா பின்னணி பாடகி சைந்தவிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்துக்கு இருவரது பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து நிச்சயதார்த்தம் நடந்தது. ஜீ.வி.பிரகாஷ் குமார்-சைந்தவி திருமணம் வருகிற 27-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில் நடக்கிறது.
மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, அன்று மாலை 6-30 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இருதரப்பு குடும்பத்தினரும் கவனித்து வருகிறார்கள்.
– See more at: http://vannimedia.com/site/news_detail/16923#sthash.n5qr4k7t.dpuf
கண்ணா லட்டு தின்ன ஆசையா தந்த வெற்றிக்குப் பிறகு இனி ஹீரோவாகத்தான் நடிப்பார் என எதிர்பார்த்தால், சந்தானத்தை மறுபடியும் ஹீரோவின் நண்பனாகவே பார்க்க முடிகிறது.
அப்ப ஹீரோ ஆசை அவ்வளவு தானா? என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
ஓகஸ்ட் மாதம் துவங்கவிருக்கும் மரியாதை ராமண்ணா ரீமேக்கில் சந்தானம் தான் கதை நாயகன். இது காமெடிக்கு மட்டுமல்ல நடிப்பதற்கும் ஸ்கோப் உள்ள படம்.
படத்துக்கு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று தலைப்பிட்டு, ஸ்கிரிப்ட் வேலைகளில் இயக்குனரை பிஸியாக்கிவிட்டுள்ளார்.
இயக்குனர் யார் தெரியுமா? ஸ்ரீநாத் நினைவிருக்கிறதா? சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெயம் ரவிக்கு நண்பனாக சந்தானம், பிரேம்ஜியோடு ஒருவர் வருவாரே அவர் தான்.
மறைந்த இயக்குனர் ஜீவாவின் உதவி இயக்குனரான இவர், ஏற்கெனவே முத்திரை என்னும் படத்தை இயக்கியவர். லட்டு போலவே புல்லும் வெற்றியடையுமா? பார்ப்போம்.
அன்னை மடியில் : 10-10-1915 — ஆண்டவன் அடியில் : 24-06-2013
யாழ் மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா நல்லம்மா 24-06-2013 அன்று தனது 98வது அகவையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம்சென்ற இராசரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் மகளும், காலம்சென்ற நடராஜா அவர்களின் மனைவியும்,
மகேந்திரராஜா, சோதிமதி, சரோஜினிதேவி, ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் காலம்சென்ற தவமலர் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 25-06-2013 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் நண்பகல் 12 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்திற்கு தகனக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.
எதிர்வரும் ஜுலை மாதத்திலிருந்து அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள பஸ் கட்டணம் குறித்து 27ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொசான் குணவர்தன தெரிவித்தார்.
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது பஸ் சங்கம் உடன்பாடொன்றிற்கு வருவதற்கு கால அவகாசம் தேவை என கேட்டுக் கொண்டமைக்கு இனங்க பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் 27ஆம் திகதி அறிவிக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பஸ் கட்டண அதிகரிப்பு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.
6.2 வீதத்தினால் அதிகதிக்க ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் 7 வீதத்தினால் அதிகரிக்குமாறு பஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை பஸ் கட்டண அதிகரிப்பு 10 வீதத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
சுவையான உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்..
சப்பாத்திக்கு..
கோதுமை மா – 2 கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
மசாலாவிற்கு..
உருளைக்கிழங்கு – 2-3 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
கரட் – 1 (நறுக்கியது)
குடைமிளகாய் – 1/2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1-2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/2 கரண்டி
மிளகாய் தூள் – 1 கரண்டி
சீரகம் – 1/2 கரண்டி
கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு
செய்முறை..
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, அதில் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கி, பின் கேரட், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு காய்கறிகள் வேகும் வரை வதக்க வேண்டும்.
பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசாலா உருளைக்கிழங்குடன் சேரும் வரை வதக்க இறக்க வேண்டும்.
அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சப்பாத்தி மாவை சப்பாத்திகளாக தேய்த்து நெய் சேர்த்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும். இறுதியில் இந்த சப்பாத்திகளின் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை தேய்த்து அதனை சுருட்டி பரிமாற வேண்டும். வேண்டுமெனில் உருளைக்கிழங்கு மசாலா வைத்த பின், அதன் மேல் தக்காளி சோஸ் ஊற்றி சுருட்டி பரிமாறலாம்.
இப்போது சுவையான உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் ரெடி!!!
இரவில் சப்பாத்தி செய்து எஞ்சியிருந்தால் வேண்டுமெனில் காலையில் அதனைக் கொண்டும் உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல் செய்யலாம்.
தமிழக முகாம்களிலிருந்து விசைப்படகு மூலம் நாகை கடல் பரப்பு வழியாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 60 பேர் கியூ பிரிவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
கியூ பிரிவு போலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின்போது நாகை கீச்சாங்குப்பம் பகுதியில் மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் புதிதாக இருந்த மர்ம படகு ஒன்றை பொலிஸார் கைப்பற்றினர்.
இந்த படகு நாகை மாவட்டம் செருகூரை சேர்ந்த மாணிக்கவேல் மகன் செந்தில் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. மேலும் அந்த படகில் 60 இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் பின்னர் அவர்களை கடத்தி செல்லும் முயற்சியை கைவிட்டதும் தெரிய வந்தது.
இலங்கை அகதிகளை கடத்தி செல்ல முயன்றதாக மதுரை மாவட்டம் திருவாதவூர் முகாமில் இருக்கும் உமா ரமணன் என்கிற ரமணன், விழுப்புரம் மாவட்டம் கீழ புதுப்பட்டு முகாமை சேர்ந்த பாபு, மற்றும் நாமக்கல் மாவட்டம் எம்.மேட்டுப்பட்டி முகாதை சேர்ந்த தயா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தரகர்களாக செயல்பட்டது தெரிய வந்தது.
மேலும் படகு உரிமையாளர் செந்திலும் கைது செய்யப்பட்டார். இவர்கள் நாகை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை புழல் சிறைக்கு கொண்டு செல்ல பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 6ந் திகதி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே ஒரே விசைப்படகில் தப்பிச்செல்ல முயன்ற 120 பேர் கடற்படையினர் சிக்கியிருந்தனர்.
நியூஸிலாந்தில் இலங்கை இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜூரி சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்து ஒக்ஸ்போர்ட் பகுதி வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த சமீர சந்திரசேன உயிரிழந்தமை குறித்து கைது செய்யப்பட்டுள்ள இரு இலங்கையர்கள் தொடர்பில் இச்சபை விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது
23 மற்றும் 33 வயதுடைய இலங்கையர்களே குறித்த மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட நாளன்று சந்திரசேன வீட்டில் கலவரம் இடம்பெற்றுள்ளதாக ஒக்ஸ்போர்ட் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
28 வயதுடைய சமீர சந்திரசேன கடந்த வியாழக்கிழமை தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், தீ ஏற்படுவதற்கு முன்னர் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறிய ஒக்ஸ்போர்ட் பகுதியில் சமீர சந்திரசேன, சாமி என்ற பெயரில் பிரபலமானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நேரடியான அழுத்தமும் ஜப்பானின் மறைமுகமான அழுத்தமுமே இலங்கை அரசாங்கம் 13
ஆவது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதை ஒத்திவைத்துள்ளமைக்கு காரணமாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை எம் மீது சுமத்திய இந்தியா இன்று அதனூடாக வட மாகாண சபை தேர்தலை நடத்தும் வியூகத்தில் வெற்றி கண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயமானது 13ஐ பாதுகாக்கும் இந்தியாவின் இறுதிக் கட்ட அழுத்தமாகும். அரசாங்கம் சீனாவுடன் நெருக்கமான உறவுகள் கொண்டிருப்பதை இந்தியாவும் ஜப்பானும் விரும்பவில்லை.
இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்காவின் உந்துதலின் கீழ் மேற்கண்ட இரு நாடுகளும் 13 ஐ பாதுகாப்பதற்கான
கடும் அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளன. இலங்கைக்கு அதிகளவில் நிதியுதவிகளை ஜப்பான் வழங்குகின்றன.
இந்த உதவிகளையும் மேலும் அதிகரிக்கவும் ஐ.நா. வில்அமெரிக்கா எமது நாட்டுக்கு எதிராக முன்வைத்த பிரேரணையிலிருந்து இலங்கையை பாதுகாப்பதற்கும் ஜப்பான் உறுதியளித்துள்ளது.
அரசாங்கம் இன்று பாரிய நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளது. இவ்வாறானதோர் நிலையில் ஜப்பானின் மறைமுகமான அழுத்தத்திற்கு அரசாங்கம் இணங்கி போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறம் இந்தியா கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கின்றது.
இங்கு பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடத்தப்படாமல் இருந்திருக்குமானால் வட மாகாண சபை தேர்தலை நடத்தும் நிலைமை உருவாகியிருக்காது. இந்த வியூகத்தையும் இந்தியாவே வகுத்தது. இம்மாநாட்டை இங்கு நடத்தும் பொறியில் இலங்கையை சிக்க வைத்து அதன் மூலம் வட மாகாண சபை தேர்தலை நடத்துவதில் வெற்றி கொண்டுள்ளது.
இம்மாநாடு இங்கு நடத்தப்படாமல் இருந்திருக்குமானால் வடமாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருந்திருக்கலாம்.ஆனால், இன்று அரசாங்கம் இத் தேர்தலை நடத்தும் கட்டாயத்தில் இருக்கின்றது.பொலிஸ், காணி அதிகாரங்கள் பறிக்கப்படாது வடக்கில் தேர்தலை நடத்துவது பெரும் ஆபத்தானதாக அமையும் என்றார்.
கொழும்பு மாநகர சபையின் 12 நகர பிரதேசங்கள் டெங்கு நோய் பரவும் கடும் ஆபத்துக்குரிய இடங்களாக இருப்பதாக நகர பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தெமட்டகொடை- வனாத்தமுள்ள- பொரளை- கொம்பனித்தெரு- மட்டக்குளி- முகத்துவாரம்- மகவத்தை- கிருலப்பனை- பாமன்கட- வெள்ளவத்தை- நாரஹேன்பிட்டி- கறுவாக்காடு ஆகிய பகுதிகளே இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளன.
தினசரி புதிதாக 183 டெங்கு நோயா ளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர்.
கொழும்பு நகரில் 1425 நோயாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். ஏழுபேர் மரணித்துள்ளனர்.
பொரளை ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் ஆஸ்பத்திரியில் நேற்று ஒரு குழந்தை டெங்கு நோயினால் மரணித்துள்ளது.
தேசிய நூதனசாலை- மகாவலி கேந்திர நிலையம்- ஜோன் டி சில்வா அரங்கு- அரச அச்சகம் உட்பட 14 அரச நிறுவனங் கள் டெங்கு குடம்பி பரப்பும் இடங்களாக காணப்பட்டமைக்காக அந்த நிறுவனங் களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்ட தாகவும் டொக்டர் காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பு நகரில் 20500 அரச தனியார் நிறுவனங்களும்- வீடுகளும் சோதனைக் குட்படுத்தப்பட்டன.
இதில் 1170 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
550 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்றும் டொக்டர் காரியவசம் மேலும் தெரிவித்தார்.